ஸ்ருதிஹாசனை அரை டவுசரோடு பார்க்கணுமா? யோசிக்காம உள்ள வாங்க!
அதென்னவோ தெரியவில்லை, பக்கத்து ஸ்டேட்டில் ‘காத்தாட’ திரியும் நடிகைகள் பலர், நம்ம ஊர் ஏர்போர்ட்டில் இறங்கிய நிமிஷம் தொட்டே இழுத்துப் போர்த்திக் கொள்கிற கெட்ட வழக்கம் எல்லா காலத்திலேயும் இருக்கிறது. “அந்த ஊரு ரசிகர்கள் கொடுத்தா ரூவா… நாங்க கொடுத்தா அதுக்கு பேரு என்னம்மா?” என்று சட்டத்தை கூட துணைக்கு அழைப்பார்கள் போலிருக்கிறது இங்கேயிருக்கும் அந்த வெறிபிடித்த ரசிகர்கள். அவர்களெல்லாம் ஏ.ஆர்.கே ராஜராஜாவின் பேச்சை கேட்டால், கோபத்தை குழியில் தள்ளி புதைத்துவிட்டாலும் ஆச்சர்யமில்லை.
ஆந்திராவில் ரிலீசாகும் படங்களை சுட சுட டப்பிங் செய்து தமிழகத்தில் வெளியிடுவது அவரது தலையாய பணிகளில் ஒன்று. தற்போது செல்வந்தன், புரூஸ்லீ படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுவிட்டு, கைநிறைய காசு பார்த்த குஷியில் இன்னொரு படத்தை இறக்குகிறார். படத்தின் பெயர் ‘எவன்டா?’ தெலுங்கில் வெளிவந்த பலுபு என்ற படத்தின் தமிழாக்கம்தான் இது. ரவிதேஜா ஹீரேவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலியும், ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார்கள். தனது மகனுக்காக தானே பெண் பார்க்க கிளம்புகிறார் பிரகாஷ்ராஜ். பணத்துக்காக எல்லாரையும் காதலித்து ஏமாற்றும் ஸ்ருதிஹாசனை அவர் தனது மகனுக்காக பார்க்க, மகன் ஸ்ருதியை எப்படி டீல் பண்ணினார். இறுதியில் அவர் கட்டிக் கொண்டது ஸ்ருதியையா? அஞ்சலியையா? என்பதுதான் கதை. நடுவில் வில்லன்களின் துரத்தல், அடி உதை எல்லாம் உண்டு. (படத்தில் மொத்தம் பதினொரு பைட்?)
என்ன சொல்கிறார் ராஜராஜன். ஸ்ருதிஹாசன் அரை டவுசர் போட்டுக் கொண்டு தமிழில் நடிச்சதேயில்ல. ஆனால் அவங்களை அப்படி பார்க்கணும்னு ஆசைப்படுகிற ரசிகர்கள் என்ன பண்ணுவாங்க? அவங்களுக்காகதான் இந்த மாதிரி படங்களை டப்பிங் பண்ணி வெளியிடுறோம். டப்பிங்னா அப்படியே கொடுக்கறதில்ல. இங்கே நாங்க ஒரு எடிட்டிங் பண்ணுவோம். எவ்வளவு இழுவையான படமா இருந்தாலும் எங்க கை பட்டா விறுவிறுன்னு மாறும். வேணும்னா பலுபு… அதான், இந்த எவன்டாவை பாருங்களேன் என்றார்.
ஸ்ருதி டவுசரு ஏன் கிழிஞ்சுருக்குன்னு கேட்டு டெய்லர்ட்ட சண்டை போடுற அளவுக்கு ஒன்றப் போறான் ரசிகன்!