த்ரிஷா, டாப்ஸி ஓ.கேவாம்! டேக் ஆஃப் ஆகுது செல்வராகவன் படம்!

தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா? துவங்கினாலும் நிறுத்தப்படாமல் நடக்குமா? நடந்தாலும், செல்வாவின் பழைய ஸ்டைலில் இருக்குமா? இப்படி அடுத்தடுத்த கேள்விகளோடு தடதடக்கும் இதயங்களுக்கு இந்த செய்தி இனிப்பாக இருக்கலாம்…

யெஸ்… வருண்மணியன் பைனான்ஸ் பண்ண, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியே அந்த படத்தை தயாரிக்கிறாராம். படத்தில் சிம்புவுக்கு மூன்று ஜோடிகள். அதில் த்ரிஷாவும் டாப்ஸியும் கன்பார்ம் என்கிறார்கள். அந்த இன்னொரு ஜோடிதான் நான் என்று சொல்ல யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ? இருந்தாலும் சிம்புவின் டேஸ்ட்டையும் மனதில் கொண்டு ஹீரோயின் வேட்டை ஆரம்பம் ஆகியிருக்கிறது. கண்டிப்பாக ஆன்ட்ரியா இருக்க மாட்டார் என்பது திண்ணம்.

பின் குறிப்பு- முதலில் இந்த படத்தை தானே தயாரிப்பதாக முடிவு செய்து களம் இறங்கிய வருண் மணியன், படம் துவங்கிய இரண்டாவது நாளே எடுத்தார் ஓட்டம். இந்த முறை வெறும் பைனான்ஸ் மட்டும்தான் தருகிறாராம். வட்டியோடு செட்டில் செய்ய வேண்டிய செல்வா அண் பேமிலி, இனி விறுவிறுப்பாக செயலில் இறங்க வேண்டியதுதான்!

Read previous post:
அமலாபால் கொழுந்தன் ஆவியோடு பேசுவாராம்?

நடிகர் உதயாவுக்கு கண்டிப்பாக அறிமுகம் தேவைதான்! காலமும் அது தரும் ஹிட்டுகளும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருப்பதால், உதயா நடித்த முந்தைய படங்களை பற்றி இளைய தலைமுறை...

Close