கதை, திரைக்கதை, இயக்கம், உங்கள் ஷகிலா ஷகிலா ஷகிலா
மாவை ஊத்தியாச்சு. உருப்படியா வர்றது இட்லியா தோசையாங்கறது வெந்த பிறகுதான் தெரியும். இப்படியெல்லாம் நாக்கு மேல பல்லு படாம விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ஒரு படத்தை! காரணம், அந்த படத்தை இயக்கப் போவது கவர்ச்சி முதிர் கன்னி, மலையாள மந்தாகினி ஷகிலாவேதான்.
தார் பாயை தாறுமாறா மடிச்சு வச்ச மாதிரி ஒரு ஷேப்பில் இருந்தாலும், கடந்த பல்லாண்டுகளாகவே ஷகிலாவை பற்றி உதட்டில் உமிழ்நீர் வடிய வடியதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இங்கேயும் எங்கேயும். இப்படியொரு ரசனை கெட்ட ஆம்பிளைங்க இருக்கிற வரைக்கும் ஷகிலா காட்டில் மழையென்ன, மின்னல் இடியெல்லாம் கூட சகஜம். வெறும் நடிகையாக பலரையும் கதி கலங்க வைத்த ஷகிலா, இப்போது டைரக்டராகவும் மாறிவிட்டார். ஆனால் அவர் ஆக்ஷன் கட் சொல்லும் அழகை காண வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு மூட்டை கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டும். ஏன்?
ஏனென்றால் இவர் இயக்கிவரும் படத்தின் ஷுட்டிங் ஆந்திராவில்தான் நடந்து வருகிறது. தெலுங்கு, இந்தி இருமொழிகளில் இந்த படத்தை இயக்கி வருகிறார் அவர். இந்த படத்தின் கதை, திரைக்கதை மட்டும்தான் ஷகிலா. வசனத்தை வேறு யாரோ எழுதுகிறாராம். படத்தில் ஒரு காட்சி கூட பெண்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டதாக இருக்காது. கவர்ச்சி கிடையாது. ஆபாசம் கிடையாது. அருமையான காதல் கலந்த குடும்பக் கதை என்கிறாராம் ஷகிலா.
பூ வியாபாரியெல்லாம் மீன் விற்க கிளம்பினா, மீன் யாவாரியெல்லாம் பூ விற்க கிளம்ப வேண்டியதுதான்.
தமிழ்ல டப் பண்ணி வெளியிடுவாங்களாம்… அப்ப இருக்கு மக்களே உங்களுக்கு!