அடடா… இப்படியாகிட்டாரே ஷகீலா?

கரண்ட் இல்லாத ட்யூப் லைட் போலிருக்கிறார் ஷகிலா. இருந்தாலும், அவரை இன்னும் கவர்ச்சி பதுமையாகவே கற்பனை செய்து வைத்திருக்கிறது தமிழ்சினிமாவும், மலையாள சினிமாவும். அவர் பற்றிய செய்திகள் வந்தாலோ, புகைப்படம் வந்தாலோ அடித்து பிடித்துக் கொண்டு ஷேர் பண்ணும் ‘ஷேர்’ மார்க்கெட்டர்கள் சமூக வலை தளங்களில் பெருகி வருகிறார்கள். ‘அணைஞ்ச விளக்காயிருந்தாலும், ஒரு காலத்துல நம்ம மனசையெல்லாம் அணைச்ச விளக்குதானே?’ என்று கூட நினைத்திருக்கலாம். போகட்டும்… இன்றைய தேதியில் ஷகீலாவின் நிலைமை என்ன?

பி.ரவிக்குமார் என்ற புதியவர் இயக்கும் ‘உண்மை’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் இவர் இல்லை என்றாலும், ஷகீலா இருந்தால் அவர்தானே பேசப்படுவார்? நேற்று சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கருப்பு சேலையணிந்து வந்த ஷகீலா, என்னை இதுக்கு முன்னாடி இப்படியொரு கேரக்டர்ல நீங்க பார்த்துருக்கவே முடியாது என்கிற பில்டப்புடன் ஆரம்பித்தார். (ஆமாம்… ஆமாம்…) வேறொன்றுமில்லை, இந்த படத்தில் ‘வேம்ப் ’ ஆக நடித்திருக்கிறாராம் அவர். பயமுறுத்துகிற கேரக்டரில் நடித்திருந்தாலும், ‘கவர்ச்சி காட்டி நடிச்சிருப்பீங்களே?’ என்ற கேள்விக்கு கண்சிமிட்டி சிரித்தவர் ‘படத்துல பாருங்க’ என்றார் ஒரேயடியாக.

படத்தின் ஹீரோவான பி.ரவிக்குமார் போலீஸ் மற்றும் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறாராம். ‘அப்படியே எனக்கு இன்னொரு கெட்டப்பும் இருக்கு ’ என்றார். இப்படி ஆளாளுக்கு சஸ்பென்ஸ் வைக்க, ‘அதையெல்லாம் விடுங்க. இந்த படத்தின் ஹீரோயினை நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டதா சொல்றாங்களே? நெசமா?’ என்றார்கள் நிருபர்கள். ‘ஆமாம். ஆனால் அதை அவங்க மறுக்கலாம். நான் வாங்கிக் கொடுத்த பங்களா, தோப்பு துரவு எல்லாத்துக்கும் எவிடென்ஸ் வச்சுருக்கேன். எல்லாத்தையும் திரும்ப புடுங்காம விட மாட்டேன்’ என்றார் அவர்.

இதையே படமா எடுத்திருந்தா கூட செம கலெக்ஷன் பார்க்கும் போலிருக்கே என்ற நிருபர்களின் கமென்ட்டுக்கு சீரியஸ் ஆன ஹீரோ, என்னோட அடுத்த படமே அதுதான்ங்க என்றார். சொந்தக்கதை சோகக்கதைன்னே தலைப்பு வைக்கலாம் போலிருக்கே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 18 ஆர்.எஸ்.அந்தணன் இலைநிறைய மட்டன் எலும்பு வேணும்… – ஆசைப்பட்ட சேரன்

சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு...

Close