மீண்டும் நடிப்பு… ஷாம்லி முடிவு! அஜீத் ஆசிர்வாதம்?

‘என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரைதான் பார்க்கணும்’ என்று மகளை அஜீத்திடம் ஒப்படைத்துவிட்டு ‘அக்கடா’ என்று சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் ஷாலினியின் அப்பா. தன் இரண்டாவது மகளான ஷாம்லியையும் நடிப்பிலிருந்து கரையேற்றி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியிருந்தார். இருந்தாலும் ஒரு முறை கேமிராவுக்கு முன் நின்றவருக்கு அந்த ஆசை வற்றிப்போகுமா என்ன? அப்படியே வற்றினாலும், விட்டுவிடுவார்களா இங்கே?

அவரை பார்க்கும் இயக்குனர்கள், ‘திரும்பவும் நடிக்க வாங்க. நீங்க, உங்க அக்கா ஷாலினி, ஜோதிகாவெல்லாம் நடிக்காம போனா அது நடிப்புலகத்திற்கே வந்த நஷ்டம்’ என்றெல்லாம் உசுப்பிவிட்டு விட்டார்கள். படிப்பும் முடிந்தது. அடுத்து என்ன? என்ற தடுமாற்றத்தில் இருந்த ஷாம்லி, அத்தான் அஜீத்திடம் அட்வைஸ் கேட்டாராம். ‘சினிமா ஒரு கடல். இங்க யார் வேணும்னாலும் மூழ்கி முத்தெடுக்கலாம்’ என்றெல்லாம் தத்துவம் பேசி அறுக்காமல், ‘உனக்கு என்ன புடிச்சுருக்கோ, அதை செய்’ என்று பச்சைக் கொடி காட்டினாராம் அஜீத்.

முதல் கட்டமாக பிரபல கேமிரா கலைஞர் வெங்கட்ராமிடம் சொல்லி பிரமாதமான போட்டோ ஷுட் ஒன்றை செய்திருக்கிறார் ஷாம்லி. விரைவில் அது இன்ட்ஸ்ட்ரிக்கு அனுப்பி வைக்கப்படுமாம். இன்ட்ரஸ்ட் இருப்பவர்கள் மட்டும், கையில் அரை கோடியுடன் அணுகினால் ஷாம்லி கால்ஷீட் இப்பவே ரெடி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்!

மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே...

Close