தனுஷ் இப்போ ஷங்கர் ரஹ்மான் மாதிரி?

இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்… நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும் வாங்கிட முடியாது என்று மூணு வேளையும் பணத்தையே கரைச்சுக் குடிக்கிற கூட்டம் ஒன்று பீதி கிளப்பி வருகிறது. அது பொய்யா? நிஜமா? யாராவது விளக்குங்களேன் பாஸ்…

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சினிமாக்காரர்களில் முதலில் வாங்கியவர் ஷங்கர்தான். அதற்கப்புறம் ரஹ்மான். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் சுமார் மூன்று கார்களை வைத்திருக்கிறார்கள். (ஆளுக்கொன்று?) விஜய்யும் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி வீட்டிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். அதை வெளியே எடுப்பதில்லை. ஆனால் தினந்தோறும் அதை கழுவி குளிப்பாட்டி டவல் போட்டு துடைத்து அதே ஷெட்டில் வைத்து அழகு பார்ப்பது அவரது பிரியங்களில் ஒன்றாக இருக்கிறது.

தனுஷின் அந்தஸ்து இவர்களைப் போல வளர்ந்ததில் எல்லாருக்கும் மகிழ்ச்சி. அப்படியே ஒரு தகவல். காரின் விலை 2 கோடியே 48 லட்சமாம். அதை இந்தியாவுக்கு கொண்டுவர கூடுதலாக 2 கோடி செலவு செய்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, சென்னை வெள்ளத்திற்காக கை கொடுத்திருக்கும் ஆந்திரா ஹீரோக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார் தனுஷ். அண்ணே… ஐஞ்சோட நிறுத்திட்டீங்க. இருந்தாலும் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எண்ட குருவாயூரப்பா…! காதல் சந்தியாவுக்கு கால்கட்டு!

சென்னையில் மழைக் கொட்டிக் கொண்டிருக்க, காதல் சந்தியாவின் கல்யாணம் குருவாயூரில் மிக சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வெங்கட் சந்திரசேகரனுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த...

Close