ஸ்டிரைக்! பெப்ஸி அராஜகத்திற்கு முடிவு கட்டுகிறது தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளரின் வயிற்றில் நெருப்பு மூட்டி, அதில் ஸ்டைலாக பீடி பற்ற வைக்கும் வேலையை கால காலமாக செய்து வருகிறார்கள் பெப்ஸி தொழிலாளர்கள். படப்பிடிப்பில் அடாவடியாக பேசுவது, கூட்டமாக சேர்ந்து மிரட்டுவது, திடீர் தொழில் முடக்கம் செய்வது என்று பெப்ஸியின் அராஜகத்திற்கு பணிந்துதான் ஒவ்வொரு முதலாளியும் படமெடுத்து வருகிறார்கள். பத்து பேர் போதுமான ஷுட்டிங்குக்கு கூட, எண்பது பேரை அழைக்கவில்லை என்றால் அந்த ஷுட்டிங்கையே முடக்குவோம் என்றெல்லாம் இவர்கள் கொடுக்கும் அலப்பறைக்கு வெகு காலமாக கை கட்டி சேவகம் பார்த்த தயாரிப்பாளர் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பெப்ஸி தொழிலாளர்கள் சம்பளத்தை வரை முறை படுத்த வேண்டும் என்று கால காலமாக பேசி வந்த தயாரிப்பாளர்கள், இன்று சற்று வேகத்தோடு நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏன்? தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், பழம்பெரும் தயாரிப்பாளருமான சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு இன்று நடந்து வந்ததாம். அதில் திடீரென சம்பள உயர்வு கேட்டு முரண்டு பிடித்த தொழிலாளர்கள் தாறுமாறாக நடந்து கொண்டார்களாம். இனியும் பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த சங்கம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

அதன்படி பெப்ஸி தொழிலாளர்களின் அராஜக சம்பளத்தை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை. எந்த காரணத்தை முன்னிட்டும் அவர்கள் ஏற்றிக் கேட்கும் தொகையை கொடுக்கக் கூடாது. அந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் வரைக்கும் தற்காலிகமாக படப்பிடிப்புகளை ரத்து செய்வது. இதுதான் சங்கம் எடுத்திருக்கும் முடிவு. வரும் திங்கட் கிழமையிலிருந்து இந்த ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த கேரக்டருக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? விவகாரத்தை கிளப்பிவிட்ட கார்டூனிஸ்ட் மதன்!

தமிழ்சினிமாவில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசனெல்லாம் தொட்டும் முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் பி.சரவணராஜா. சுமார் 20 கோடி செலவில் பொன்னியின் செல்வன் கதையை 2D அனிமேஷன் முறையில்...

Close