சித்தி ராதிகாவின் அடுத்த பாய்ச்சல்! ஷார்ட் பிலிம் டைரக்டர்களுக்கு யோகம்!!

‘ராதிகா கைய வச்சா அது ராங்கா போனதில்லே’ என்பதற்கு பெரிய உதாரணம் அவரது ராடன் டி.வி நிறுவனம்தான். வீட்டுக்கு வீடு கேபிள் வழியாக நுழைந்து கொள்ளை கொள்ளையாக மனசுகளை சம்பாதித்து வைத்திருக்கும் வெள்ளந்தி சிரிப்பழகி ராதிகாவை, இப்போதும் ‘சித்தி’ என்று கொண்டாடுகின்றன கிராமங்கள்! சின்னத்திரை, வெள்ளித்திரை என்று ரவுண்டு கட்டி சாதித்து வரும் ராதிகாவின் அடுத்த ஸ்டெப்…. குறும்பட ஏரியா!

உலகம் முழுக்க இளைஞர்களுக்காக ஒரு ஷார்ட் பிலிம் போட்டியை வைத்திருந்தது அவரது ராடன் டி.வி நிறுவனம். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட அந்த போட்டியிலிருந்து ஆறு பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தனது நிறுவனத்தின் சார்பில் டெலி பிலிம் இயக்குகிற வாய்ப்பை வழங்கவிருக்கிறார் ராதிகா. அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவர்களுக்கு சினிமா எடுக்கிற வாய்ப்பும் வழங்கப்படுமாம்.

சரி… இந்த ஷார்ட் பிலிம்களை நாம் எங்கே பார்ப்பது? வேறெங்கே… ராதிகாவின் ஆட்டக்களமான சின்னத்திரையில்தான். இந்த குறும்படங்களை தொகுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என்கிற விரக்தி பேச்சுக்கெல்லாம் இனி வேலையில்லை. திறமையை கொண்டாட ராதிகாவின் ராடன் டி.வி இருக்கிறது. போங்க போங்க… அதே திசைக்கே போங்க!

முக்கிய குறிப்பு- இந்த சிறப்பான பணியில் அம்மாவோடு இணைந்து செயலாற்றப் போவது ராதிகாவின் செல்ல மகள் ரயானாவும்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏதாவது ஒரு காரணத்துக்காக எல்லார்ட்டயும் கையேந்துறோம்! -சிம்பிள் விஜய் ஆன்ட்டனி

எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைச்சலாக இருந்தாலும், சசி இயக்கிய படங்கள் ஓடிய நாட்களின் எண்ணிக்கை ஜாஸ்தி ஜாஸ்தி! சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் என்று அவரது கணக்கில் ப்ளஸ்...

Close