காக்க வைக்கும் ஸ்ருதி ! கவலைப்படுத்தும் ஷுட்டிங் ஸ்பாட்

யாருக்கும் அலவ்டு இல்ல! ஈசிஆர் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் விஜய் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படியொரு கெடுபிடி. எல்லாருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிகளின் கெடுபிடிக்கு மத்தியில், நாள்தோறும் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்களில் பலர்.

ஏன்? தன்னிடம் கால்ஷீட் கேட்கும் அவர்களை ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லிவிடுகிறாராம் ஸ்ருதிஹாசன். வந்தவர்களை வாசலிலேயே நிறுத்தி லட்சோப லட்சம் கேள்விகள் கேட்கிறார்களாம் செக்யூரிடிகள். உள்ளேயிருக்கும் ஸ்ருதிக்கு தகவல் அனுப்பினாலும், பதில் வர மணிக்கணக்கில் ஆவதால், அங்கிருக்கும் மர நிழலில் ஓரமாய் ஒதுங்கி நிற்கிறார்கள் அவர்கள்.

பாலாறுல பல்லு தேய்ச்சுட்டு கோளாறுல குளிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்?

Read previous post:
தொடர்பு எல்லைக்கு வெளியில்…? விக்ரம்!?

ஐ படத்தின் மூலம் சீனா வரைக்கும் தன் புகழ் பரவப்போகிற சந்தோஷமோ, என்னவோ? உள்ளுர் தொடர்புகளை ஒரேயடியாக கட் பண்ணிவிட்டாராம் விக்ரம். முன்பெல்லாம் அறிமுக ஹீரோக்களை நேரில்...

Close