விஜய்சேதுபதிக்கு ஸ்ருதியை ஜோடியா பேசியாச்சாம்! ஆனால் ஏன்?
ஸ்ருதிஹாசன் அழகா, அல்லது ரொம்ப அழகா? இந்த கேள்வியை எழுப்பாத விமர்சகர்கள் இல்லை. அவரை தமிழ்நாடு ரசிப்பதை விட ஆந்திரா சற்று அதிகமாகவே ரசிக்கிறது. ஒரே பாப்கார்ன்தான்… ஆனால் அதை தமிழ்நாட்டில் பொறித்து ஆந்திராவிலும் தள்ளிவிட்றலாம் என்கிற ஆசையில் ஸ்ருதியை அடக்க விலையை விட அதிக விலை கொடுத்து புக் பண்ணுகிற வழக்கமும் இங்கு இருக்கிறது. இந்த கணக்கு இருக்கிற வரைக்கும், நம்ம கணக்குல ஒரே கூட்டல் பெருக்கல்தான் என்ற முடிவுக்கு ஸ்ருதியும் வந்து அநேக மாசமாச்சு.
சரி.. இப்போது என்ன ஸ்ருதியை பற்றி? விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாராம் அவர். தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தையடுத்து மீண்டும் அதே கம்பெனியில் விஜய் சேதுபதி நடிக்கிறார் அல்லவா? அதற்கு முதலில் ஹன்சிகாவிடம்தான் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவரும் நிறைஞ்ச மனசுடன் சரியென்றே சொன்னார். ஆனால் அதற்கப்புறம் என்ன நடந்ததோ? இப்போது ஸ்ருதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில் பின் வாங்கிய ஸ்ருதியை, என்ன காரணத்தாலோ விரட்டி விரட்டி புக் பண்ணியிருக்கிறார் தனுஷ். உனக்கு இல்லேன்னு சொல்லுச்சு. எனக்கு ஆமான்னு சொல்லுச்சு பார்த்தியா? என்கிற மோதல் சிந்தனை கூட இருக்கலாம் அதில். சரி.. இவர்களின் சண்டையில் விஜய்சேதுபதியில் இமேஜில்தான் ஏகத்திற்கு மழை!
ஜமாய்ங்க… சார்!