காசோலை ரிட்டர்ன்? வங்கி அதிகாரிகளை அலையவிட்ட ஸ்ருதி
எவ்வளவோ பணம் இருந்தாலும், கடன் வாங்கி கலர் படம் ஓட்டுவதுதான் பணக்காரர்கள் பலருக்கு வாடிக்கை. எல்லாம் ‘டாக்ஸ்’ தந்திரம். அப்படியொரு தந்திரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது நிஜமாகவே பணம் இல்லையா தெரியாது. மும்பை பாந்தரே ஏரியாவில் தனக்கென ஒரு விசேஷ பிளாட் வாங்கினார் ஸ்ருதி. இதை வாங்க வங்கி கடன்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறது. எச் – ல் -துவங்கும் அந்த வங்கியின் அதிகாரிகள், ஸ்ருதியின் பயோ-டேட்டாவை கண்டு மயங்கி உடனே சில கோடிகளை அலாட் செய்தார்களாம்.
இப்போது அதே எச் வங்கி அதிகாரிகளுக்கு ஒரே ‘ஹச் ஹச்…’ இந்த தும்மல் ராங் சென்ட்டிமென்ட் அன்றி வேறென்ன? ஸ்ருதி கொடுத்த முதல் தவணை செக்கே ரிட்டர்ன் ஆகிவிட்டதாம். அதற்கப்புறம் அவரை தொடர்பு கொள்ள எத்தனையோ முறை முயன்றும் அவர்களுக்கு ஸ்ருதியின் தரிசனம் கிடைக்கவேயில்லை. நேரில் வேண்டாம். அட்லீஸ்ட் போனிலாவது பிடித்துவிடலாம் என்று நம்பரை தேய்த்ததுதான் மிச்சம். அதற்கும் வழியில்லையாம். அப்புறமென்ன?
நேரே புறப்பட்டு சென்னைக்கு வந்துவிட்டார்கள். மகள்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளையெல்லாம் மன்னிப்பதுதானே அப்பாக்களின் அன்பு. அவரது அலுவலகமே அந்த முதல் தவணையை செட்டில் செய்து அனுப்பியதாம். அடுத்த செக்குக்கு நேரம் வந்தாச்சு. அதற்கப்புறமும் சென்னை வருகிற வேலை இருக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார்களாம் அதிகாரிகள்.
அப்படியே இன்னொரு எக்ஸ்க்ளுசிவ்! அதே பிளாட்டுக்கு பக்கத்து பிளாட் இன்னொரு முக்கிய தமிழ்ப்பட ஹீரோவால் வாங்கப்பட்டிருக்கிறது. ‘இந்தாளு எதுக்கு அங்க போய் வாங்குறாரு?’ என்று சந்தேக கணைகள் பாய ஆரம்பித்திருக்கிறது. அந்த மூன்றெழுத்து ஹீரோ இப்போதுதான் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பிளாட் ஒண்ணு தேவைதானே என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், மேற்படி ஸ்ருதியால் இவரது சொந்த வீட்ல சூறாவளி அடிப்பதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.