பேசாம இருக்கியா பிந்து! ஃபயர் சேதுபதியான விஜய் சேதுபதி

கொள்ளிக்கட்டைய எடுத்து முதுகு சொறிஞ்சாலும் சொறிஞ்சுப்பேன், ‘வசந்தகுமாரன் ’படத்தில் நடிக்க முடியாது. அதுவும் ஸ்டூடியோ நைன் தயாரிச்சா அவ்ளோதான்’ என்று பின் வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. இந்த பஞ்சாயத்து கடும் வேகம் எடுத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் முற்றிலும் புகை மூட்டம் நின்றபாடில்லை. அது மீண்டும் தீப்பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கோடம்பாக்கம் கும்மியடித்துக் கொண்டிருக்க, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி முகத்துல பவுடர் போடு கதையாக வேறொரு பக்கம் கயிறு இழுக்க ஆரம்பித்திருக்கிறாராம் பிந்து மாதவி.

இந்த படம் துவங்கும் போதே பிந்து மாதவியை ஹீரோயினாக்குங்க என்று கேட்டுக் கொண்டார் வி.சே. அவர் நினைத்தபடியே ஆக்கியும் விட்டார்கள். இப்போது இந்த படம் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில், பிந்து மாதவியே சிபாரிசுக்கு கிளம்பியிருக்கிறாராம். ‘எதுக்கு இவ்வளவு வம்பு? பேசாம அந்த படத்துல நடிச்சுருங்களேன்’ என்று வி.சேவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்திருக்கிறாராம்.

‘உனக்கு என்னோட ஜோடி சேர்ந்து ஒரு படத்துல நடிக்கணும். அவ்ளோதானே? நான் பார்த்துக்குறேன். இப்போ இந்த படத்தை பற்றி கொஞ்ச நாளைக்கு பேசாம இருக்கிறீயா’ என்று ஃபயர் சேதுபதியாகிவிட்டார் வி.சே.

மாடு மந்தைக்கு இழுக்குது. கயிறு கவணைக்கு இழுக்குது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லிங்காவில் நன்றி சொல்லியிருக்கணுமா பென்னி குயிக்குக்கு? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

‘லிங்கா’ படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக்கும், அதில் ரஜினியின் நடிப்பும் இன்னும் பல வருஷங்களுக்கு பேசப்படும்! அதே நேரத்தில் அந்த கேரக்டர் யாரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது...

Close