நடிகையோடுதான் கல்யாணமா? இக்கட்டான கேள்வி எஸ்கேப் ஆன சித்தார்த்!

கத்தி முனையை கருங்கல்லால் தட்டி மழுங்கடிப்பதில் சித்தார்த்தை விட சிறந்த சமர்த்தர் ஒருவரும் இருக்க முடியாது. ‘ஜிகிர்தண்டா’ படத்தின் நீளம் குறித்து கவலைப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர்களுக்கெல்லாம் சமாதானம் சொல்கிற விதத்திலும், இவ்….வ்ளோ பெரிய படம் என்று சலித்துக் கொண்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்கிற விதத்திலும் பேச ஆரம்பித்தார்.

நானும் கார்த்தி சுப்புராஜும் படம் முடிஞ்ச பிறகு பேசுன முதல் விஷயம் அதுதான். படம் 2 மணி நேரம் 52 நிமிஷம் லெங்க்த் இருந்தாலும், யாரும் சலிச்சுக்க மாட்டாங்க. ரசிப்பாங்கன்னு நினைச்சோம். அதுதான் நடந்திருக்கு. போன வருஷம் தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றியடைஞ்சுது. இந்த வருஷம் ஜிகிர்தண்டா. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த படத்தில் என்னைவிட பாபி சிம்ஹாவுக்குதான் ஸ்கோப் இருக்குன்னு எனக்கு தெரியும். இந்த படம் வெளிவர்றதுக்கு முன்னாடியே நான் இதை பல இடங்களில் சொல்லியிருக்கேன். இன்னைக்கு என் நண்பனான அவனுக்கு கிடைச்சிருக்கிற பாராட்டுகள் எனக்கு சந்தோஷத்தைதான் தந்திருக்கு.

ஏன் வேறொரு நடிகருக்கு ஸ்கோப் உள்ள படத்தில் நீங்க நடிக்கறீங்க என்று கூட சிலர் கேட்கலாம். அமீர்கானோட நான் ரங் தே பசந்தி படத்தில் நடிக்கும்போது தன் கேரக்டரை கூட சுருக்கிகிட்டு எனக்கு ஸ்கோப் கொடுத்திருந்தார் அமீர்கான். கிட்டதட்ட எட்டு நிமிஷம் நானும் அவரும் ஸ்கிரீன்ல வருவோம். என்னை நடிக்க விட்டுட்டு அவரு வெயிட் பண்ணுவார். அந்த படத்தில் நடிச்ச பிறகுதான் நானும் அப்படி மத்தவங்களுக்கு இடம் கொடுத்து நடிக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். அந்த தைரியம்தான் இந்த படத்தில் என்னை நடிக்க வச்சுது. ஜிகிர்தண்டா மட்டுமில்ல. தமிழ்ல நான் நடிச்சு வரப்போற இன்னும் மூணு படத்திலேயும் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற சித்தார்த்திடம், தெலுங்கு ஃபீல்டை சுத்தமா மறந்தாச்சா? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. இல்ல… நெக்ஸ்ட் இயர் அங்கயும் சில புதுப்படங்களில் நடிக்கிறேன். ஜிகர்தண்டாவும் அங்கே ரிலீஸ் ஆகப்போவுது என்றார்.

சினிமாவை பற்றி பேசியாச்சு, அடுத்து கல்யாண பேச்சுதானே? உங்க கல்யாணம் ஒரு நடிகையோட இருக்குமா? என்றொரு கேள்வி விழுந்தது.

அது ஒரு கல்யாணமா இருக்கும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். கல்யாணத்தை பற்றி சொல்லும்போது மற்ற விஷயங்களை பேசலாம் என்று முடித்துக் கொண்டார் சித்தார்த். நடுநடுவே அவரை மடக்கிய பிரஸ், ஜிகிர்தண்டா A dirty cornivel படத்தோட காப்பிதானே என்றெல்லாம் கேள்விகளை வீச, ‘அதையெல்லாம் நீங்க கார்த்திகிட்டதான் கேட்கணும்’ என்று சித்தார்த் எஸ்கேப்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘போகாதே… ’ ஹீரோயினை தடுத்த இயக்குனர்?

‘இயக்குனரின் பிடியில் நடிகை’ என்று இந்த செய்திக்கு தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேனை ருசிக்கிற நேரத்தில் தேங்கா மட்டையை நினைப்பானேன்? வேறொன்றுமில்லை, ‘பொறியாளன்’...

Close