கடுப்புக்கு சித்தார்த் நம்பரை அழுத்தவும்… ஒரு டைரக்டரின் கதைப் பயணம்

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்…’ இந்த பதிலை கேட்காத செல்போன் உபயோகிப்பாளர்களே இருக்க முடியாது. செல்போனையும் ஒரு கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்படும் படத்திற்கு இதைவிட பொருத்தமான ஒரு தலைப்பு கிடைத்துவிடுமா என்ன? ஏகமனதாக ஒன்றை அழுத்திவிட்டார் இயக்குனர் ராம் பிரகாஷ். எங்கேயும் எப்போதும் சரவணனிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுக் கொண்டவருக்கு, இந்த கதையை அவர் மனதில் வைத்திருக்கும் ஹீரோக்களை வைத்து எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன? சித்தார்த்திடம் சொன்னாராம். கதையை பொறுமையாக கேட்டவர், இந்த கதையில அப்கமிங் ஹீரோக்களை வச்சு எடுங்களேன்… பொருத்தமா இருக்கும் என்றாராம். (இவரு பொசிஷன் என்னவாம்?) அப்புறம் விஜய் சேதுபதி. போன் அடிக்கும்போதே ரெண்டு வருஷத்துக்கு ஐயா கதை கேட்க மாட்டாரு என்று கூறிவிட்டதாம் செல்போன்.

இப்படி யார் யாரிடமோ மாறு கால் மாறு கை வாங்கப்படுவதை விட, நகுல் அட்டக்கத்தி தினேஷ் மாதிரி அடுத்த கட்ட ஹீரோக்களை அப்ரோச் செய்தால் என்ன என்று தோன்ற, விழுந்தது மாங்கனி. நகுல் துள்ளி குதித்தாராம். இப்படி இப்படி இப்படியொரு சப்ஜெக்ட்டுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஐ லவ் திஸ் ஸ்கிரிப்ட் என்று சொல்ல, லபக்கென அமுக்கியிருக்கிறார்கள் அவரை. அதற்கப்புறம் தினேஷ். வழக்கமாக எல்லா படத்திலும் நகுல் ஓவர் ஆக்ட்டிங் செய்வாரில்லையா? இதில் அவரை செம அடக்கமாக்கியிருக்கிறார் டைரக்டர் ராம் பிரகாஷ். அப்படியே கலகலப்பாக்கியிருக்கிறார் தினேஷை.

பிந்து மாதவியும் தினேஷும் ஒரு ஜோடி. நகுலும் ஐஸ்வர்யா தத்தா என்ற புதுமுகமும் இன்னொரு ஜோடி. சரி கதை என்ன? தமிழ்நாட்டில் ஒரு காந்தப்புயல் அடிக்கிறது. இதில் தகவல் தொடர்பு சாதனங்கள் அத்தனையும் செயல்படாமல் ஸ்டக் ஆகிவிட, ஊரும் உலகமும் காதலர்களும் கடலை போடுகிறவர்களும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதானாம். வழக்கம்போல காமெடிக்கு கூடுதல் ஸ்பேஸ் கொடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் ராம் பிரகாஷ்.

காய்கறி விக்கிற லேடி கல்பனா சாவ்லா மாதிரி பேசுனா எப்படியிருக்கும்? அப்படியொரு கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் ஊர்வசிக்கு. படத்துல ஊர்வசி பேசுற பேச்சு உலகம் முழுக்க பேசுனாலே இந்த படம் ஹிட் என்று நம்புகிறது படக்குழு.

ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண எதைங்க அழுத்தணும்?

1 Comment
  1. Ghazali says

    //ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ண எதைங்க அழுத்தணும்?// – ‘பணத்தை!’

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

நடிகர் நாசரின் மகன் பைசல் நாசர் விபத்தில் சிக்கினார். தனது நண்பர்களுடன் இன்று காலை மஹாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அவருடன்...

Close