சமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்? முளைத்ததா மோதல்?

நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா இருக்கும்’ என்று மட்டும் கூறினார். ஏதோ போகிற போக்கில் ஜாக்கிரதையாக சொல்லிய பதிலாகதான் அதை பார்த்தது பிரஸ். ஆனால் அதற்கப்புறம் நமக்கு கிடைத்த ஸ்கூப் நியூஸ்தான் இந்த ‘பிரேக் அப்’ விவகாரம். ஒருவேளை அப்படி இல்லாமலிருந்தால் இறைவா… உனக்கு நன்றி!

ஏனென்றால் ‘இன்னைக்கு இவரோட லவ், நாளைக்கு அவரோட லவ்’ என்று மார்னிங் ஷோ, மேட்னி ஷோவாகிப் போய் கிடக்கிறது கோடம்பாக்கத்தின் பல காதல்கள். யார் யாரோடு பிக்கப்? யார் யாரோடு பிரேக் அப்? என்பதை கூட பெட் கட்டி பேசுகிற அளவுக்குதான் இருக்கிறது இவர்களின் காதல். அப்படிப்பட்ட ஏரியாவில்தான் ஆரோக்கியமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தது சித்தார்த் சமந்தா லவ். சமந்தாவின் கால்ஷீட் மேனேஜராக சித்தார்த் அப்பாவே இருக்கிறார் என்கிற அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகினார்கள் இருவரும். ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமந்தாவை பார்த்து ‘நீதானே என் பொன் வசந்தம்…’ என்று சித்தார்த் பாடியதையும், அதை கோடம்பாக்கத்தின் ஸ்டார்களே ரசித்து போற்றியதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அடிப்படையில் சித்தார்த் ஒரு ப்ளே பேக் சிங்கர் என்பதும் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சித்தார்த்துக்கும் சமந்தாவுக்குமான காதல் கெட்டியானத்தற்கு உருப்படியான இரண்டு காரணங்கள் சொல்லுங்க என்று கொஸ்டீன் போட்டால், சினிமாவுலகத்தை ரெகுலாக கவனித்து வரும் ரசிகர்கள் பட்டென பதில் சொல்லிவிடுவார்கள். ஒன்று… சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்றவர். இந்த ஒரு காரணத்திற்காக சமந்தா பேமிலி அவரை நெருங்க விடாமல் தடுத்தது. ஆனால் மணந்தால் மகாதேவன்தான் என்று சித்தார்த் மீது செம காதலாகி திரிந்தார் சமந்தா. அதற்கப்புறம் பேமிலியே புரிந்து கொண்டது. இரண்டு… சமந்தாவுக்கு சருமநோய் ஏற்பட்டபோது, இன்டஸ்ட்ரியே அவரை ஒதுக்கி வைத்தது. அந்த நேரத்தில் ‘தோல்’வியே வெற்றிக்கு அறிகுறி என்று அவரை தேற்றி ஆறுதலளித்து அருகிவிருந்து பார்த்துக் கொண்டவர் சித்தார்த். சற்றே கர்ண கடூர… அதே நேரத்தில் சாக்லெட் இமேஜூம் கலந்தபடி திரிந்த சித்தார்த்தை, காமெடியான ஸ்கிரிப்டை ட்ரை பண்ணி பாரு என்று திசைமாற்றி விட்டவரும் சமந்தாதான்.

இப்படி காதலிலும் தொழிலிலும் பின்னி பிணைந்து கிடந்த இந்த ஜோடி மீது யார் கண் பட்டதோ? இருவரும் பிரிந்துவிட்டதாக காதை கடிக்கிறார்கள் இங்கே. சித்தார்த் ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பதால் சமந்தாவின் பெற்றோரும், சித்தார்த்தும் பெற்றோருமே காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியதையெல்லாம் நாடு நன்கு அறியும். இவ்வளவு முன் ஜாக்கிரதையாக இருந்தும் இப்படியொரு தகவல்!

இந்த லவ் பிரேக் அப் ஆக என்ன காரணம்? விசாரித்தால், நம்பவும், நம்ப முடியாமலும் பல தகவல்களை கொட்டுகிறது கோலிவுட். அதில் ஒன்றுதான் சமந்தாவின் அளவுக்கு மீறிய கவர்ச்சி! மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அளவு கடந்த கவர்ச்சி காட்ட துவங்கிவிட்டார் சமந்தா. இது பிடிக்காத சித்தார்த் அவரை கட்டுப்படுத்தியதாக தெரிகிறது. சினிமாவில் கவர்ச்சியும் முக்கியமான அம்சம்தான் என்பதை ஒரு ஹீரோவாக சித்தார்த் உணர்ந்திருந்தாலும், வருங்கால மனைவி என்ற அக்கறையில் அதை சகித்துக் கொள்ள முடியவில்லையாம் அவரால். அது மட்டுமல்ல, சமீபகாலமாக தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான பெல்லங்கொண்ட ஸ்ரீநிவாசுக்கும் சமந்தாவுக்கும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போவதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ட்விட்டரில் ஏடாகூடமாக ஸ்டேட்டஸ் போட்டு மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் சமந்தாவுக்கு சப்போர்ட் பண்ணிய சித்தார்த், இப்போது அவரை கண்டு கொள்வதே இல்லையாம். ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு இருந்தவர்கள் இப்போது பாராமுகமாகி விட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதுபற்றி மீடியாக்கள் கேள்வி எழுப்பினால் ’எனக்கு இப்ப கல்யாணத்தை பத்தி யோசிக்க நேரம் இல்லை. முதல்ல கேரியர். நோ பெர்சனல் கேள்வி’ என சொல்லிவைத்தாற்போல் மறுத்துவிடுகிறார் சமந்தா. நேற்று சென்னையில் நடந்த ஜிகிர்தண்டா சக்சஸ் மீட்டிலும் இப்படிதான் பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டு போனார் சித்தார்த். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் 90 சதவித காதல் தோல்விகள் பெற்றோர்களின் எதிர்ப்பால் தான் நிகழ்கின்றன. ஆனால் பெரும் போராட்டத்துக்கு பிறகு பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிய பின்பும் கூட ஒரு அழகான காதல் ஜோடி பிரிகிறது என்றால்… காளஹஸ்தியில் யாரோ தப்பான அய்யரு இவர்களுக்கு மந்திரம் சொல்லியிருப்பாரோ என்றுதான் தோற்கிறது.

முக்கிய குறிப்பு- கடந்த சில மாதங்களாகவே சித்தார்த் வீட்டிலேயே தங்கி படப்பிடிப்புக்கு போய் கொண்டிருந்த சமந்தா இப்போது அந்த வீட்டுப்பக்கம் போயும் பல நாட்கள் ஆகிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்!

சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும்...

Close