அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?

‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த வரிசையில் ‘இதோ… நாளான்னைக்கு கண்ணாலம்’ என்கிற லெவலில் படு ஸ்பீடாக போய் கொண்டிருந்த காதல் ஜோடி சித்தார்த்- சமந்தா ஜோடிதான்.

நடுவுல நிறைய தடைகள் வருதேப்பா… பேசாம காளஹஸ்தியில போய் ஒரு நாகசர்ப தோஷ நிவர்த்தி பண்ணிடலாமா என்று ரெண்டு பேரும் குடும்பதோடு கிளம்பி போயிருந்ததெல்லாம் நாடறியும். அவ்வளவு ஸ்டிராங்காக ஆக்ஷன் எடுத்தும் இருவருக்குள்ளும் செம விரிசல். இனி நீ வேறு, நான் வேறு என்கிற அளவுக்கு போனது நிலைமை. அது போன வாரம்… இது இந்த வாரம்…!

சுந்தர்சி இயக்கவிருக்கும் அரண்மனை 2 படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று லட்டுகள் நடிக்கப் போகிறார்களாம். ஒருவர் சமந்தா. ஓகே. சொந்த பட்டா. சொல்லுக்கு வேலையில்லை. அப்புறம்?

த்ரிஷாவும் அஞ்சலியும்! சுந்தர்சியே சொல்லிவிட்ட பிறகு சமந்தா வேண்டாம் என்றெல்லாம் சொல்லி, வந்த வாய்ப்பை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம் சித்தார்த். சுந்தர்சி படம்னாலே கதை இருக்கோ இல்லையோ? கலர் கலரா கலர்ஸ் இருக்கும்! வாங்க வாங்க… சீக்கிரம் வாங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாட்ஷாவை காப்பியடிச்சா கேஸ் போடுவேன்! அஜீத் படத்திற்கு நோட்டீஸ்!

‘தெரியாத்தனமா விக்ஸ் வாங்கிட்டேன். ஜலதோஷமே வா....’ என்பதை விடவும் மோசமாக இருக்கிறது இந்த விஷயம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அஜீத் நடிக்கும் புதிய படத்தின் கதை...

Close