சிம்பு எந்நேரத்திலும் கைதாகலாம்! சட்டென்று மாறுது வானிலை

டேஷ் பாடலுக்கு எதிராக சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சிம்பு. அது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டார். அப்போது இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு முன், அந்த பாடலை ஒருமுறை கேட்டுவிடும்படி நீதியரசர் ராஜேந்திரனை அவர் கேட்டுக் கொண்டார். முதலில் இதை மறுத்த நீதிபதி, பின்னர் உணவு இடைவேளையின் போது அந்த பாடலை கேட்டாராம்.

அதற்கப்புறமும் ஏற்பட்டதுதான் அந்த திருப்பம். சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறியிருக்கிறார் அவர். பின்பு இது தொடர்பான தீர்ப்பை ஜனவரி 5 ந் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். சிம்பு அனிருத் இருவரையும் கைது செய்வதற்கு தடையில்லை என்று என்று அவர் கூறியதை அடுத்து, சென்னை போலீஸ் சிம்புவை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

நாம் கைது செய்யப்பட மாட்டோம் என்று கடந்த சில நாட்களாக சற்று தெம்பாக இருந்த சிம்பு, தற்போது எப்படி இந்த பிரச்சனையை எதிர்கொள்ளப் போகிறாரோ? இதற்கிடையில் இது தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டு வரும் சில சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், கோவிலுக்கு வரும் பக்தைகளை சல்லாபித்து அதை தன் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த செல்போன் ரிப்பேர் ஆனபோது கடையில் கொடுத்து பழுதுபார்க்க கூறியிருந்தார் தேவநாதன். அந்த கடைக்காரர்தான் மேற்படி வீடியோக்களை கசியவிட்டவர். ஆனால் கைது செய்யப்பட்டவர் கசியவிடப்பட்ட கடைக்காரர் அல்ல. நாலு சுவற்றுக்கு நடுவில் ரகசிய தப்பு செய்த தேவநாதன்தான்.

நித்யானந்தா விவகாரத்தில் கூட, அந்த வீடியோவை வெளியிட்டது அவரல்ல. ஆனால் கைது செய்யப்பட்டது அந்த ஆன்மீக சுடரொளிதான்(?) . இப்படி முன்னுதாரணங்கள் இருக்க, சிம்பு மட்டும் எப்படி தப்பிக்க முடியுமாம்?

1 Comment
  1. விக்னேஷ் says

    நீ தான் தப்பே பண்ணவில்லை தானே அப்புறம் என்ன பீப்க்கு ஓடி போய் பதுக்குற. உன்னையெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடணும்டா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! https://wh1049815.ispot.cc/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’...

Close