கொன்னேபுடுவேன்… உன்னை நான் கொன்னேபுடுவேன்…! டிசைனை மாற்றிக் கொள்ளாத சிம்பு

அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து சிம்புவுக்கு ‘பொங்கல்’ வைக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்காக சிம்பு தன் சீரிய பாட்டுப் பணியை விட்டு ஒழிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

அவர் பீப் பாடல் ஒன்றை பாடி, அது வெளிவந்து ஒரு வாரம் வரைக்கும் வானொலி, டி.வி. இணையதள, பண்பலை எல்லாவற்றிலும் அலசோ அலசென்று அலசி, இப்போதுதான் அந்த நெடி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. இந்த பாடல் தொடர்பாக அவர் மீது வழக்கு போட்டவர்களில் சிலர் இப்போதும் தன் பிடியை விடாமல் கோர்ட் வாசலில் கொக்கியோடு நிற்கிறார்கள். இருந்தாலும் சிம்புவின் சேவையில் எள்ளளவும் இடையூறு வந்ததாக தெரியவில்லை.

அவர் புதிததாக நடித்துக் கொண்டிருக்கும் AAA படத்திற்காக ஒரு பாடலை இன்று பாடியிருக்கிறார் சிம்பு. அதில் வருகிற ஒரு சரணம்தான் இது-

என்னை விட்டு
யாரையாச்சும் நீ
கல்யாணம்தான்
பண்ணிகிட்டா
கொன்னேபுடுவேன்…
உன்னை நான்
கொன்னேபுடுவேன்…!

என்னை விட்டுவிட்டு இன்னொருவனை நீ நேசித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என்று போகிறது அந்த பாடல். சுவாதி கொலை வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நீதிமன்றம் கவலைப்பட்டு நிற்கிற நேரத்தில், சிம்புவின் பாட்டு எப்படியிருக்கிறது பாருங்கள். இந்த கருத்தாழம் மிக்க பாடலை எழுதியவர் அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். பாடியவர்தான் சிம்பு.

அட்ரா அவளை… வெட்றா அவளை என்றொரு பாடல் சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. அதை இப்போது குறிப்பிட்டிருக்கும் நீதியரசர் ஒருவர், இப்படியெல்லாம் பாடல் வந்தால் எப்படி? சென்சார் என்ன செய்கிறது? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி முழுசாக இரண்டு வாரம் ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு பாடல்.

சிம்புவோட டிசைன் அப்படி!

https://youtu.be/dUiyKcpbFWU

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சோனா போச்சு! ரம்யா வந்திச்சு! ஹிஹிஹி…

பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சாலும், பிரேம்ஜி சிரிப்பை ரசிக்க முடியாது. அப்படியிருந்தும் அவரது சிரிப்பை ரசித்து, ஜோக்கில் குளித்து எவ்வித சேதாரமும் இல்லாமலிருக்கிறார் ரம்யா என்றால், அவர்...

Close