ரஜினியோடு மோதும் சிம்பு?

எப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும் குறுக்கே நிற்பதாக குமுறுகிறது கோடம்பாக்கம். ஒரு புறம் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்கவே அதிக நேரம் பிடிக்கிறதாம். அணைக்கட்டின் மேல் நின்று ரஜினி போடுகிற ஃபைட் காட்சிகள் எல்லாமே அங்கு படமாக்கப்பட்டவை அல்ல. அங்கு ஃபைட் காட்சிகளை எடுக்கவும் போலீஸ் அனுமிதியில்லை. எனவே கிரீன் மேட்டில் ஷுட் செய்யப்பட்டு அதை அணைக்கட்டு எடுக்கப்பட்ட காட்சியுடன் மேட்ச் செய்ய வேண்டியிருக்கிறதாம். இதற்கு அதிக நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள்.

நடுவில் ‘லிங்கா’ என்னுடைய கதை என்று மதுரை நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அதே வழக்கில் கூடுதலாக அவர் மேலும் சில ஆதாரங்களை கொடுத்து அடிஷனல் நோட்டீசும் அனுப்பியுள்ளதால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி, அதையும் குறிப்பிட்ட நேரத்தில் முடித்தாக வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, டிசம்பர் 12 ந் தேதி ரிலீசை இரண்டு வாரம் தள்ளிப்போடலாமா என்று கருதுகிறார்களாம் லிங்கா முதலாளியும் டைரக்டரும்.

‘லிங்கா’ வருவது போல வரட்டும். நாங்க டிசம்பர் 26 ந் தேதி திரைக்கு வர்றோம் என்று வாலு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணியிருக்கிறார் சிம்பு. லிங்காவையும் இதே தேதியில் வெளியிடலாம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறார்கள். எத்தனையோ கால இழுபறிக்கு பிறகு ‘வாலு’ படத்தை முடித்து திரைக்கு வருகிறோம். இந்த நேரத்தில் லிங்கா வந்தால் நம்ம பொழப்பு என்னாவது? அதனால் கண்ணை மூடிகிட்டு வேறு தேதிக்கு ஓடிவிடலாம் என்கிறாராம் தயாரிப்பாளர். ஆனால் சிம்பு கேட்டால்தானே? யார் வந்தாலும் சரி, மோதினாலும் சரி, டிசம்பர் 26 ந் தேதி ரிலீஸ் செஞ்சே ஆகணும் என்கிறாராம்.

சூப்பர் ஸ்டாரோடு லிட்டில் சூப்பர் ஸ்டார் மோதினால் யாருக்கு சேதம் என்பதை உலகம் தானாக சொல்லிவிட்டு போகப்போவுது? நமக்கெதுக்கு டென்ஷன்?

Read previous post:
வன்மம் / விமர்சனம்

ஒரு காலத்தில் ட்ரென்ட் செட்டராக இருந்த ஃபிரண்ட் செட்டர் கதைகள் எல்லாம் ஷட்டரை மூடி வெகுகாலமாச்சு! அதை புதுப்பிக்கும் நோக்கத்துடன் வந்திருக்கும் திக் பிரண்ட்ஸ் கதைதான் வன்மம்....

Close