தொடர்ந்து டார்ச்சர் பண்ணினா ஏடிஎம்கேவுல சேர்ந்துருவேன்! சிம்பு மிரட்டலால் அதிர்ச்சி?
ட்விட்டரில் உதயநிதியும், சிம்புவும் கட்டி உருளாத குறைதான். இவ்விருவருக்குமே சப்போர்ட்டுக்கு வரும் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு தாறுமாறாக முண்டா தட்டுவதால், ஏரியாவே கலீஜ்! அதிலும் சிம்பு ரசிகர்கள் “நீ சந்தானத்தை வச்சு கதைய ஒட்ற. ஆனா அந்த சந்தானத்துக்கே வாய்ப்பு கொடுத்தவரு எங்க தலைவரு” என்றெல்லாம் சொல்லி சிம்பு சைட்டில் வெயிட் ஏற்றுகிறார்கள். “அடேய்… கொஞ்சமாவது மூளையோட யோசிங்கடா. அவரு படத்தை நான் ஏன் தடுக்கப் போறேன்” என்கிறார் உதயநிதி. இப்படி போகிற அந்த குழாய் சண்டையில் லேட்டஸ்ட் திருப்பம் ஒன்று!
300 தியேட்டர்கள் வாலு படத்திற்கும் 320 தியேட்டர்கள் உதயநிதி ரிலீஸ் செய்யும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாம். நல்ல விஷயம்! இது மாலை நிலவரம்தான். ஆனால் காலை நிலவரமே வேற…?! அது என்ன தெரியுமா?
உதயநிதிதான் தனது வாலு படத்திற்கு தியேட்டர்கள் தர விடாமல் தடுக்கிறார். அவரது கட்சி பின்னணிதான் தியேட்டர்காரர்களை பணிய வைக்கிறது என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்ட சிம்பு, ஆத்திரத்தில் இவ்வாறு கூறினாராம். அதுவும் கரெக்டாக உதயநிதி காதுக்கு போய் சேரும் விதத்தில்! எப்படி தெரியுமா?
“என்னை தொடர்ந்து டார்ச்சர் பண்ணினா, நானும் எங்கப்பாவும் ஏடிஎம்கேவுல சேர்ந்துருவோம். அப்புறம் எப்படி எனக்கு தியேட்டர் தராம தடுப்பாங்கன்னு பார்ப்போம்!”
கறி கடைக்கு வழி கேட்டா, சொறி சிரங்குக்கு வைத்தியம் சொல்வாரு போலிருக்கே?