சிம்புவை டென்ஷனாக்கிய பிரஸ்! இருந்தாலும் மனுஷன் கூல்!

சிம்பு கல்யாணம் பற்றி பேசும்போதெல்லாம் பைப்பை திறந்து கண்ணீர் ஒழுகும் அவரது அப்பா டி.ஆர் கூட ஒரு நிமிஷம் திகைத்து, அப்படியா சேதி? என்று ஆச்சர்யப்பட்டிருப்பார். அப்படியொரு அதிர்ச்சியை அவரது குடும்பத்திற்கு அளித்தது பிரஸ்.

சிம்புவுக்கு கல்யாணம். அதுவும் சொந்தக்கார பெண்ணோடு என்று கொளுத்திப்போட, முன்னணி சேனல்கள் கூட கிராஸ் செக் பண்ணாமல் பிளாஷ் நியூஸ் அடித்தன. பதறிப்போன சிம்பு, ஊர் வாயை மூடணும்னா முதல்ல பிரஸ் வாயை மூடணும் என்கிற முடிவுக்கு வந்தார். “என் கல்யாணம் பற்றி பலவித வதந்திகள் வருகின்றன. முடிவாகும்போது நானே சொல்றேன். அதுக்குள்ளே ஏன் அவசரப்படுறீங்க. என் பர்சனலை விட்டு கொஞ்சம் தள்ளிப் போறீங்களா?” என்று கேட்டுக் கொண்டார்.

உண்மையில் சிம்புவின் நிலைமை இப்போது கல்யாணம் பண்ணுகிற சூழ்நிலையில் இல்லை என்பதுதான் நிஜம். ஹன்சிகாவுடன் மஹா. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் ஹீரோ. அதற்கப்புறம் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபுவின் மாநாடு என்று ஓட்டத்தை ஆரம்பித்துவிட்டார். 2020 கடைசி வரைக்கும் கமிட்மென்ட் இருக்கு. அதற்கப்புறம் மூச்சுவிட நேரம் கிடைக்கும்போது கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்று கூறிவிட்டாராம்.

ஸோ… சிம்புவை பற்றி பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது கல்யாணத்தை பற்றி ஏன் இப்போ ‘டாக்’கணும்? அதை இன்னும் பனிரெண்டு மாசத்துக்கு தள்ளிப் போடுங்க சகோஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னது… நடிக்கக் கூடாதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கவலை!

Close