முதல்ல தேர்தல் நடக்குதா பாரு?! விஷாலுக்கு சிம்பு மிரட்டல்!

எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான நாடகத்தின் பதை பதைப்பான எபிசோட்! இன்று பிற்பகல் நடிகர் சங்கம் தவிர்த்த திரையுலகத்தின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குனர் சங்கம் மூன்றும் அவசரமாக ஒரு விஷயத்தை அறிவித்தது.

நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் இரண்டு அணியினரையும் அழைத்து சமாதானம் செய்து வைக்கப் போகிறோம் என்று கூறினார் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு. இந்த நிலையில் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ராதிகா, சிம்பு, கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மற்றும் நடிகர் மோகன்ராம் ஆகிய ஐவரும். ஆரம்பத்தில் பேசிய ராதிகா, “நாங்கள் நடிகர்கள். எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டால் அதை நான்கு சுவற்றுக்குள் முடித்துக்கொள்வதுதான் அழகு. ஆனால் அதை வீதிக்கு வர வச்சுட்டாங்க. இந்த விஷயத்தில் மீடியாவும் தேவைக்கு அதிகமாகவே விஷயத்தை பரபரப்பாக்கிட்டீங்க”.

“ஆரம்பத்திலிருந்தே இந்த விஷயத்தில் எல்லாரையும் ஒன்றுமையாக கொண்டு செல்லதான் நான் பாடுபட்டேன். கமலிடம் பேசினேன். சிவகுமாரிடம் பேசினேன். கார்த்தியிடம் பேசினேன். விஷாலிடம் கூட பேசினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. விஷால் ரெட்டி தனது சுயநலத்திற்காக எல்லாரையும் தூண்டி விடுகிறார். ஏழைகளுக்காக நான் உதவப் போகிறேன் என்கிறார். இது மாதிரி நிறைய பார்த்துட்டேன் நான். நடிகர் சங்க கட்டிடத்தை நான் நடிச்சு அதுல வர்ற வருமானத்துல கட்டுவோம்னு சொல்றார். இளைய தளபதி விஜய் மாதிரியோ, அஜீத் மாதிரியோ உனக்கு ஒரு பெரிய மார்க்கெட் இல்ல. ரீசண்ட்டா வெளியான உன்னோட படத்தின் கலெக்ஷன் ஐந்து கோடியை தாண்டல. அதுக்குள்ள உன்னை விஜய்யாகவும் அஜீத்தாகவும் நினைத்துக் கொள்ள வேண்டாம். உன் படத்தில் வர்ற வருமானத்தை வச்சு எப்படி நடிகர் சங்கத்தை கட்ட முடியும் உன்னால்?”

“கார்த்திக்குக்கும் இப்பதான் ஒரு படம் ஓடியிருக்கு. இவங்கள்லாம் அவங்க படத்தில் நடிச்சு வர்ற வருமானத்தில் கட்டிடம் கட்டப் போறாங்களாம். வேடிக்கையா இருக்கு. விஷால் ரெட்டியையும், கார்த்தி சிவகுமாரையும் யாரோ சிலர் தூண்டி விடுறாங்க. சுயநலத்துக்காக சங்கத்தை கைப்பற்ற நினைக்கிறாங்க. சிசிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் போது விஷால் சரத்குமாரை தரக்குறைவாக பேசினார். அப்போ நான் கண்டித்தேன். அன்றிலிருந்தே அவர் திட்டம் போட்டுதான் எல்லாவற்றையும் செய்து வந்திருக்கிறார்னு இப்ப புரியுது என்றார் ஆவேசமாக.

அதற்கப்புறம் மைக்கை பிடித்த சிம்பு, கடும் கோபத்தோடு வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார். நீ கிரிக்கெட் விளையாடுறேங்கறதுக்காக உன்னை கேப்டன் கேப்டன்னு சொன்னாங்க. அதுக்காக கேப்டன் விஜயகாந்த் ஆயிடுவியா நீ? ஏண்டா… அவரு இந்த சங்கத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காருன்னு தெரியுமா? கேப்டன் இடத்துல உங்கார்றதுக்கு உனக்கு என்னடா தகுதியிருக்கு? என்று சகட்டு மேனிக்கு எகிற ஆரம்பித்துவிட்டார்.

உன்னை ராதாரவியண்ணன் நாய்னு சொன்னதா சொல்றியே? அவரு அப்படி சொல்லியிருக்கக்கூடாது. ஒரு நரியை எப்படி நாய்னு சொல்ல முடியும்? நீ நரி. நடிகர் சங்கம்ங்கற என் குடும்பத்தை கலைச்சு நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவன் நீ. யாரும் விஷாலை நம்பி போகாதீங்க. என் நண்பர்கள் கார்த்தியிடம் பேசினேன். கருணாசிடம் பேசினேன். விஷாலிடம் பேசும்போது சிரிக்கிறான். இனிமே என்ன பண்ண முடியும்னு நக்கலா சிரிச்சுகிட்டே கேட்கிறான். அவனை நம்பி இந்த சங்கத்தை ஒப்படைக்கப் போறீங்களா? என்றார் ஆவேசத்தோடு.

“தேர்தல் நடந்தால்தானே இதெல்லாம்? முதல்ல தேர்தல் நடக்குதா பாரு..’’ என்று சிம்பு கொக்கரித்ததில் ஏதோ திட்டம் இருக்கும் போல தெரிகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ?

3 Comments
 1. பிம்பிடிக்கி பிளாப்பி says

  சிம்பு ஒரு படத்தில் சொன்ன வசனம் இது.. ஆப்பு யாரும் யாருக்கும் வெக்க வேண்டாம்.. அது இருக்குற எடத்துல தானே வந்து உக்காருவாங்க…!”

 2. Karthick says

  முதலில் நீ நாவை அடக்கி பேச கற்று கொள். உனக்கு அழிவு நிச்சயம்.

 3. Prabhu says

  வெற்றி பெற போவது திரு. விஷால் அவர்கள் தான்.
  திரு விஷால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவும் கமல்ஹாசனும் ஒண்ணா? பரபரப்பை கிளப்பிய பாண்டிராஜ்!

எங்கு போனாலும் சிம்புவின் புகழ் பாடாமல் ஓய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர் பாண்டிராஜ். என்ன பண்ணுவது? அவர் வலி அவருக்கு! இன்று சென்னையில் நடந்த ‘தூங்காவனம்’...

Close