ஒரு கர்சீப் இருந்தா கொடுங்க… எளிமையால் வியக்க வைத்த ரஜினி
கூழாங்கற்கள்தான் குதியோ குதியென குதிக்கும். எவரெஸ்ட்டுகள் எவர் தள்ளினாலும் அசைந்து கொடுக்காது. தமிழ்சினிமாவின் எவரெஸ்ட்டான ரஜினியை இப்போதும் வியந்து வியந்து போற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது படங்களில் பணியாற்றும் டெக்னீஷியன்கள். ஆனால் ரஜினிபோலவே மிமிக்ரி பண்ணும் நடிகர்கள்தான் தன்னை ரஜினியாகவே நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார்கள். அவர்கள் யாரென்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் ரஜினிக்கு ஏன் இப்படியொரு நல்ல பெயர்?
ஒரு சம்பவம்… ஃபிரம் லிங்கா ஷுட்டிங் ஸ்பாட்!
படத்தில் ரஜினி ஒரு கோட் போட்டிருக்கிறார். முகத்திலும் கழுத்திலும் மேக்கப் பவுடர் சமாச்சாரங்கள். ஷாட் பிரேக்கில் ரஜினியை அணுகும் அசோசியேட் இயக்குனர், ‘சார்… அடுத்த ஷாட் வைக்க அட்லீஸ்ட் அரை மணி நேரத்திற்கும் மேலாகும். அதனால் உங்களுக்கு முதல் தளத்தில் ரூம் ஒதுக்கியிருக்கோம். ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தீங்கன்னா ஷாட் ரெடியானதும் நாங்க அழைக்கிறோம். பிறகு வரலாம் என்கிறார் பணிவாக.
அட நீங்க வேற. நான் இப்போ கோட்டை கழட்டணும். அங்கு போய் சேர்வதற்கு பத்து நிமிஷம், திரும்பி வர பத்து நிமிஷம், ரெஸ்ட் எடுக்க பத்து நிமிஷம்னு போயிரும். திரும்பி வந்தால் மறுபடியும் கோட் மாட்டணும். மேக்கப் டச் பண்ணணும். எவ்வளவு டைம் வேஸ்ட்? ஒரு கர்சீப் இருந்தா கொடுங்க. கழுத்துல வியர்வை வடிஞ்சுதுன்னா கோட்ல பவுடர் படும். அந்த கர்சீப்பை காலர்ல செருகிக்கிறேன். இங்கேயே ஒரு ஓரமா நின்னுகிட்டு இருக்கேன். அடுத்த ஷாட்டுக்கான வேலையை பாருங்க என்று கூறுகிறார் ரஜினி ரொம்பவும் கூலாக.
வேறெந்த ஹீரோக்களிடமும் பார்க்க முடியாத எளிமை இது என்று ஜில்லாகிறார்கள் லிங்கா ஏரியாவில். இது ஒருபுறமிருக்க, லிங்கா படத்தின் டப்பிங் வேலைகளை மளமளவென ஆரம்பித்துவிட்டார்களாம். ரஜினியும் காலையில் வந்து இரவு வரை இருந்து டப்பிங் பேசிவிட்டு போயிருக்கிறார். அங்கும் அவரது எளிமையை வியக்க ஆரம்பித்திருக்கிறது லிங்கா டீம்.
எல்லாரும் பரப்பிவிடுற லிங்கா செய்தியை பார்த்தால், படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வந்துரும் போலிருக்கே?