ரஜினி விவகாரத்தில் சிங்காரவேலனின் புத்திசாலித்தனமான மூவ்!

மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும் அவருக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதை இப்படியே விட்டால் ஒழித்துவிடுவார்கள் என்று முடிவு கட்டிய சிங்காரவேலன், மொத்த விஷயத்தையும் சின்னம்மா காதுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்திருக்கிறாராம்.

முதல் கட்டமாக சொந்தங்களை சந்திக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. நடுவில் உருக்கமாக ஒரு ஆடியோ பதிவையும் தயார் செய்து அதை ரஜினியின் பார்வைக்கும் அனுப்பி வைத்துவிட்டார். ‘தலைவர் உங்க பேச்சை கேட்டுட்டாரு… அதை கேட்ட பின் சற்று நேரம் அமைதியா இருந்துட்டு எழுந்து போயிட்டாரு’ என்கிற அளவுக்கு அவருக்கு ஃபீட் பேக்குகள் போய் சேர்கின்றனவாம்.

திருவாளர் பொதுஜனத்திற்கு போரடிக்கிற அளவுக்கு இழுவையாகிவிட்ட இந்த லிங்கா விவகாரத்தில் எது நடந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களுக்குதான் அமாவாசை அல்லது பவுர்ணமி. நமக்கென்ன வந்துச்சாம்!

1 Comment
  1. கார்த்திகை செல்வன் says

    சூப்பர் ஸ்டார் ரஜினியை சுற்றி தான் இந்திய சினிமாவே உள்ளது. இந்திய சினிமாவின் அடையாளம் தலைவர் ரஜினி அவர்கள். ஸ்டைல் மன்னன் ரஜினி நடித்து 38 படங்கள் வெள்ளி விழா கொண்டாடி உள்ளது. 53 படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடி உள்ளது. 4 படங்கள் ஓராண்டுக்கும் மேலாக ஓடி உள்ளது. உலகம் முழுவதும் ஒரு இந்திய நடிகருக்கு ரசிகர் மன்றம் ரஜினி ஒருவருக்கு தான் உள்ளது. இவற்றில் தமிழர்கள் அதிகம் வசிக்காத இடங்களில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியை மக்கள் அறிந்து வைத்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாங்க என்ன அப்படியா பழகுனோம்?

சந்தானத்திற்கும் உதயநிதிக்கும் இருக்கிற பிரண்ட்ஷிப் ஊரறிந்த விஷயம்தான். ‘சந்தானம் என் படத்துல இல்லேன்னா நான் நடிக்கறதை பற்றியே யோசிக்கணும்’ என்று சொல்லுகிற அளவுக்கு மூழ்காத பிரண்ட்ஷிப் அவர்களுக்குள்....

Close