‘ஐ ஓப்பனிங் ’ ஹீரோன்னா அவருதான்…! சிவகார்த்தியேனை புகழும் சக ஹீரோ?
தமிழ்சினிமாவில் திடீர் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன்தான். ஆந்தையின் இறக்கை அடித்துக் கொள்வதை போலவே படபடவென பேசும் சுய ‘தம்பட்ட’ ஹீரோக்களுக்கு மத்தியில், ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அடித்துக் கொள்வதை போல சுவாரஸ்யமாக பேசக்கூடியவர் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். அது விஜய் டி.வி யிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவமாக கூட இருக்கலாம். ஆனால் இப்போதும் சிவகார்த்திகேயன் வாய் திறந்தால் அவரை சுற்றி நின்று ரசித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது படக்குழுவினர்.
சரி… மேட்டருக்கு வருவோம். அண்மையில் நடிகர் விஷாலிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ‘சமீபத்தில் நீங்க வியந்து பார்த்த ஹீரோ யார்?’ சில சுய தம்பட்ட ஹீரோக்களாக இருந்தால் இந்த கேள்விக்கு ‘என்னையே நான் வியந்து பார்க்கிறேன்’ என்று மொக்கையாக ஒரு பதிலை சொல்லிவிட்டு நகர்ந்திருப்பார்கள். ஆனால் விஷால் மனதில் பட்டதை பட்டென்று பேசுகிற டைப். ஓப்பனாகவே போட்டு உடைத்துவிட்டார்.
‘சிவகார்த்திகேயன்தான்! இன்னைக்கு இன்டஸ்ட்ரியே அவரது வளர்ச்சியை கண்டு ஆ ன்னு வாயை பிளக்குது. எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவா அவர் இருக்கார்’ என்று கூறியிருக்கிறார். இந்த பதிலுக்கும் விஷால் பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கப் போகிற திட்டத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று நம்புவோமாக!
superb…siva anna rockz..