சேர்ந்து நடிங்களேன்… சில்லரையை பார்த்துக்குறேன்! விஜய்சேது சிவாவுக்கு வலை

ரஜினியையும் கமலையும் கூட திரும்ப ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைத்துவிட முடியும். அஜீத்தையும் விஜய்யையும் கூட ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைத்துவிட முடியும். ஆனால் சிவகார்த்திகேயனையும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க யார் முயன்றாலும், அவர்களுக்கு பேண்டேஜ் உறுதி. அப்படியொரு யுத்த களத்தில் நிற்கிறார்கள் இருவரும். இவர் பெயரை சொன்னால் அவரும், அவர் பெயரை சொன்னால் இவரும் எட்டிக்காயை கடித்த மாதிரி எபெஃக்ட் கொடுக்கிறார்கள். இருந்தாலும்…?

இப்படியொரு கேள்வியை போட்டாலே யாரோ இந்த வேலையை செய்ய துடிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? யெஸ்… சிவகார்த்திகேயனையும் விஜய் சேதுபதியையும் தான் தயாரித்து இயக்கவிருக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க பிளான் போட்டிருக்கிறாராம் பார்த்திபன். அவரது முயற்சி பலித்தால் அந்த படத்தின் வியாபாரம் கூரையை பிய்ச்சுகிட்டு கொட்டும் என்பதை யாராலும் சட்டென்று யூகித்துவிட முடியும்.

ஆனால் வளர்ற நேரத்தில் இப்படியெல்லாம் வலை போடுவார்கள். கழுவுனாலும் நழுவணும். நழுவும்போதே கழுவணும் என்று தனக்கு தானே ட்யூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த முயற்சிக்கு என்ன பதில் சொல்லப் போகிறாரோ? இவர் எண்ணம் இப்படி. விஜய் சேதுபதி?

அவர்தான் வையாபுரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறீங்களா என்றால் கூட, ஆகட்டும் பார்க்கலாம் டைப் ஆசாமியாயிற்றே?

Read previous post:
முடிஞ்சா கண்டுபிடிங்க… முன் ஜாக்கிரதை சசிகுமார்

பாலா படத்திற்காக சசிகுமார் வைத்திருந்த கெட்டப் எங்கே போனதென்றே தெரியவில்லை. சுந்தரபாண்டியனாகவே ‘தலைமுறைகள்’ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார். சசிகுமார் வருவார். அந்த புதிய கெட்டப்பை வளைத்து வளைத்து...

Close