ஆக்சிலேட்டரை முறுக்குங்க சிவா…!

விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லாத எவராலும் வெற்றியை அடைய முடியாது. அண்மைக்காலமாக விமர்சனங்களுக்கும் மதிப்பளிக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாப் ஸ்டார்களில் ஒருவராக அவர் முன்னேறிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், தன்னை பற்றி வருகிற செய்திகளையும் தன் படத்தின் விமர்சனங்களையும் கொஞ்சம் அக்கறையாகவே அணுக ஆரம்பித்திருக்கிறார் . ‘மான்கராத்தே’ பற்றியும் விமர்சனங்கள் எழுந்திருக்குமல்லவா? அது குறித்து இப்படத்தின் வெற்றி சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ சமயத்தில்தான் இந்த படத்தை பற்றி முதலில் பேசினோம். அப்புறம் முருகதாஸ் சார் கதை மற்றும் தயாரிப்பு என்றதும் படம் பெருசா ஆகிருச்சு. அப்புறம் ஹன்சிகா ஹீரோயினா நடிக்க வந்தாங்க. அதற்கப்புறம் அந்த படம் இன்னும் கொஞ்சம் பெரிசாச்சு. அனிருத் மியூசிக்குன்னு ஆனதும் அது இன்னும் இன்னும்னு பெரிசாகிருச்சு என்ற சிவகார்த்திகேயன் அதற்கப்புறம் சொன்னதுதான் அவரது தடுமாறாத ஸ்பீடுக்கு உத்தரவாதம்.

‘இந்த படத்தை பார்த்துட்டு இன்னும் சில விஷயங்கள் நல்லாயிருந்திருக்கலாம்னு சொல்றாங்க. அடுத்த படத்துல அதை சரி பண்ணிக்கிறேன்’ என்றார். நெற்றியில் கொம்பு முளைத்த ஹீரோக்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சிவகார்த்தியேனிடம் அந்த பக்குவமும் பண்பாடும் இருப்பதால், அவரது ஸ்பீடா மீட்டரில் ஒரு குறையும் நேராது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

ஆக்சிலேட்டரை முறுக்குங்க சிவா…!

Read previous post:
யேய்… யாருப்பா அது ரம்யாவுக்கு தொல்லை கொடுக்கறது?

பீட்சா வெற்றிக்கு பிறகு பீட்சா டெலிவரி பாய்கள் போல விறுவிறுவென வேகம் காட்டினார் விஜய் சேதுபதி. ஆனால், அப்படத்தின் ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கு பெரிசாக வாய்ப்புகளும் வரவில்லை....

Close