சிவகார்த்திகேயன் அஜீத் ஒரே படத்தில்? ஸ்கெட்ச் போடும் ஹிட் இயக்குனர்!

ஆபரேஷனுக்குப் பின் அஜீத் மீண்டும் கேமிரா முன் நிற்க அட்லீஸ்ட் ஆறு மாதங்களாகவாவது ஆகும் என்கிறது மருத்துவமனை வட்டாரம். ஆனால் அவரது செல்ப் திறன் என்னவோ? அதை அவர்தான் அறிவார். அதற்குள் இன்னொரு பரபரப்பான செய்தி கசிகிறது. அண்மைக்காலமாக சிவகார்த்திகேயனின் மனசு அஜீத் காம்பவுண்டையே சுற்றி சுற்றி வருகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வீட்டிற்கு கிளம்பிவிடும் இவர், “சேர்ந்து நடிக்கலாம் வர்றீங்களா?” என்றால் “முடியாது” என்றா சொல்லப் போகிறார்? இவ்விருவரின் நட்பையும் நன்கு அறிந்த இயக்குனர் சிவாதான் இப்படியொரு தெறி ஹிட் காம்பினேஷனுக்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறாராம்.

கடந்த சில வாரங்களுக்கு முன் அஜீத்தும் சிவகார்த்தியேனும் ஒன்றாக இருக்கும் ஸ்டில் ஒன்றில் சிவாவும் அருகிலிருக்கிற காட்சியை கண்டவர்கள் அது ஜஸ்ட் லைக் போகிற போக்கில் எடுக்கப்படதாக நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த சந்திப்பில்தான் தனது ஆசை மூட்டையை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் டைரக்டர் சிவா. இதை காது கொடுத்து கேட்ட அஜீத், அதை மனசுக்குள் அசை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காம்பினேஷன் வொர்க்கவுட் ஆகுமா? பிரபல கலெக்ஷன் ஹீராக்களாக இருக்கும் இருவரது ரசிகர்களும் இந்த காம்பினேஷனை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? இவர்கள் இருவருக்கும் சமமாக இரண்டு கேரக்டர்களை வைத்து சிவாவால் ஒரு படத்தை கொடுத்துவிட முடியுமா? ஆயிரம் கேள்விகள் இதற்குள் இருக்கிறது.

அதற்கெல்லாம் விடை கிடைத்தால்… அஜீத் சிவகார்த்திகேயனின் புதுப்பட அறிவிப்பு, கோடம்பாக்கத்திற்கு திருவிழாதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Theri Movie Motion Poster | Vijay | Samantha | Amy Jakson | Atlee | G V Prakasah

Close