சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி மேலும் முட்ட விடும் தனுஷ் ஒண்ணுமே புரியல உலகத்துல?
மூணு படத்தில் ஒரு சின்ன காமெடி ரோல் கொடுத்து சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் இழுத்தவர் தனுஷ். இந்த நன்றிக்கடனுக்கு தனுஷ் இன்னும் கொஞ்சம் வட்டி போட்டு பத்திரம் எழுதி வாங்கியது எதிர்நீச்சல் படத்தில். இப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய தனுஷ், இப்போது தானே தயாரிக்கும் படத்தில் சிவாவை மீண்டும் ஹீரோவாக்கியிருக்கிறார். ஆனால் மார்க்கெட்டில் தனுஷின் புகழையும் கலெக்ஷனையும் கூட பின்னுக்கு தள்ளிவிட்டு மளமளவென முன்னேறி வருகிறார் சிவா.
இனியும் இவரை விட்டுவிடலாகாது என்று தனுஷ் நினைப்பாரா? சேச்ச்சே… அந்தளவுக்கு அவர் கெட்டவர் இல்லை. ஆனால் சிவாவின் வேகத்தை சற்றே இறுக்கி பிடிக்க தீர்மானித்திருக்கிறார் போலும். தனுஷ் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் யார் தெரியுமா? சிவகார்த்திகேயனின் நேரடி தொழில் போட்டியாளரான விஜய் சேதுபதி. இப்படியொரு திருப்பம் நிகழும் என்று யாரும் நினைத்திருக்கப் போவதில்லை.
விஜய் சேதுபதியை ஒரேயடியாக வளர வைக்க களம் இறங்கிய தனுஷ், அந்த படத்தை இயக்கவிருக்கும் டைரக்டராக யாரை ஒப்புக் கொண்டிருக்கிறார் தெரியுமா? உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியை. ஒரு கமர்ஷியல் பட இயக்குனராக தன்னை உருவாக்கிக் கொள்வதற்காக அத்தனை தடபுடல் கதை காட்சி சமாச்சாரங்களுடன் களம் இறங்கியிருக்கிறாராம் கிருத்திகா.
தனுஷ்- விஜய்சேதுபதி- கிருத்திகா உதயநிதி- அனிருத்! காம்பினேஷன் இப்பவே அள்ளுதே…