‘ நல்லா அல்வா கொடுப்பாரு… ’ பிரபல இயக்குனரை விமர்சித்த சிவகார்த்திகேயன்!

மறுபடியும் அதே நிகழ்ச்சி பற்றிய இன்னொரு செய்திதான்… விஜய் கமல் இன்னும் பலர் கலந்து கொண்ட இந்த விழா பற்றிய செய்திகளை கொட்டி குவித்த ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மறந்தது ஏனோ? நிஜத்தில் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியின் வளர்ப்பு பிள்ளையாயிற்றே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி அவர் இல்லாமலா? வந்திருந்தார்…

ராஜா ராணி விஜய் டி.வி யின் தயாரிப்பு என்பதாலேயே படம் வெளியான நாளில் இருந்து அந்த படத்திற்கும் அதை இயக்கிய அட்லீக்கும் விருதுகளாக கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி கொடுக்காத ஏதாவது நாளில் குடோனுக்குள் புகுந்து அங்கிருக்கும் டெம்ப்பரவரி விருது பொம்மையை தானாகவே கையில் எடுத்துக் கொள்வாராம் அட்லீ. அந்தளவுக்கு அவரும் விருது நிகழ்ச்சியும் விஜய் டி.வி யும் ஒண்ணுக்குள் ஒண்ணாகி கிடக்கிறார்கள். போகட்டும்… நாம் சொல்ல வருவது அதுவல்ல, விருதை பெற்றுக் கொள்ள அட்லீயை அழைக்க, கடந்த முறை இதே விருதை அவருக்கு தரும்போது அங்கிருந்த ஆர்யா இப்போது இல்லை.

இருந்தாலும் சந்தோஷமாக மேடையேறிய அட்லீ, ‘நான் இங்கு ஒருவரை என்னோடு சேர்ந்து மேடையை ஷேர் பண்ணுறதுக்கு கூப்பிட போறேன்’ என்று அறிவித்துவிட்டு அழைத்தார் ஒருவரை. அவ்வளவுதான்…. கரகோஷம் விண்ணை பிளந்தது. வந்தவர் சிவகார்த்திகேயன். அட்லீக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் தொலைக்காட்சி பிரமுகர்களை அட்லீக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே சிவகார்த்திகேயன்தானாம். அதுமட்டுமல்ல, முதலில் ராஜா ராணி படத்தில் நடிக்கவிருந்ததும் சிவகார்த்திகேயன்தான்.

அந்த நேரத்தில் இந்த கதையை ஆர்யா கேட்டு அவருக்கு பிடித்துப் போய்விட, இந்த கதையில் நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். வேறுவழியில்லாமல் அப்படியே சிவகார்த்திகேயனை டீலில் விட்டுவிட்டு ஆர்யாவிடம் தஞ்சமானார் அட்லீ. இவ்வளவு கதையையும் மனதில் பூட்டி வைத்துக் கொண்டிருந்த சிவா, அந்த மேடையில் எல்லாரையும் வாழ்த்துவிட்டு போனார். போகிற போக்கில் அவர் சொன்ன அந்த விஷயம் ஏதோ நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதல்ல. வலியய்யா வலி.

‘அட்லீ எல்லாருக்கும் நல்லா அல்வா கொடுப்பாரு…’ இதுதான் சிவா சொன்ன அந்த விஷயம். ராஜா ராணி விஷயத்தில் அதை ருசித்து சாப்பிட்டவரல்லவா? அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08 ஆர்.எஸ்.அந்தணன்

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள் குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன்....

Close