சிவகார்த்திகேயன் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்! பின்னணியில் தனுஷ்?

கொழுத்து ராவு காலத்தில் கல்யாணம் வச்சுக்கலாம் என்று எந்த பெற்றோராவது சொன்னால், புள்ள அவங்களுடையது இல்லேன்னு அர்த்தம்! ஆனால் தனது தயாரிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ படத்தை, கொழுத்த எக்சாம் டைமிலும், வேல்ர்டு கப் டைமிலும் ரிலீஸ் செய்ய வைத்தவர் சாட்சாத் தனுஷ்தான்! அவருக்கு வெறுப்பு யார் மீது? அப்பவே இப்படியொரு கேள்வி எழுந்தது. என்னவோ புண்ணியம், தனுஷின் எண்ணம் பலிக்காமல் அந்த படம் ஓடு ஓடென்று ஓடி, படத்தை வெளியிட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்திற்கு கொழுத்த லாபம்.

அன்று நழுவிப்போன எண்ணத்தை மீண்டும் செயல்படுத்துவார் போலிருக்கிறது தனுஷ். இந்த முறையும் அவரது முன்னாள் நண்பரான சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படம் திரைக்கு வரப்போகிறது. போன முறை கொடுத்த குடைச்சல் எடுபடவில்லை. இந்த முறை எடுபடுவது மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்ததாகவும், அந்த ஒரு காரணத்திற்காகவே ‘ரஜினி முருகன்’ படத்திற்கு பைனான்ஸ் கொடுத்திருக்கும் ஒருவரை நெருங்கி, ‘நல்லா பிரஷர் கொடுங்க’ என்று கேட்டு வருவதாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட பைனான்சியரும், தனுஷூம் வெகுகால நண்பர்கள் என்பதால் இந்த விஷயத்தில் அவர் வீசும் எல்லா கற்களுக்கும் பின்னணியில் இருப்பது தனுஷ்தான் என்றும் பேசப்படுகிறது. பொழுதுபோகவில்லை என்றால் எதையாவது மெல்லும் வழக்கம் கோடம்பாக்கத்திலிருப்பதால், இந்த விஷயத்தை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதா? சிரிப்பதா? அதுவும் புரியவில்லை.

ஆனால் ஒன்று… ரஜினி முருகன் சற்று அவஸ்தையோடுதான் திரைக்கு வருவான் போலிருக்கிறது.

Read previous post:
“Panjumittai” – “My Wifeu Romba Beautifulu” Making Video

https://www.youtube.com/watch?v=JoVO440Ip_o&feature=youtu.be

Close