சிவகார்த்திகேயன் படமா? அப்படின்னா சரி! -ஏ.ஆர்.ரஹ்மான் பதிலால் குஷ்பு மகிழ்ச்சி
குஷ்பு திமுக விலிருந்து விலகியதே அஜீத்தால்தான் என்றொரு ஹேஷ்யம் நிலவிக் கொண்டிருக்கிறது இங்கே. அதாவது அஜீத்தின் கால்ஷீட்டை குஷ்பு கேட்டதாகவும், அவர் திமுக வில் இருப்பதால் அஜீத் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இதற்காகவே குஷ்பு திமுக விலிருந்து விலகியதாகவும் பேசினார்கள். இப்படி மகுடி ஊதியே பாம்புகளை செவிடாக்கினால், பார்ப்பவர்கள் மனதில் என்ன நினைப்பு வரும்? அஜீத்தின் மனசிலும் அந்த நினைப்புதான் வந்ததாம். கால்ஷீட் கொடுத்தாலும் பிரச்சனை. கொடுக்காமல் போனாலும் பிரச்சனை. அதனால் குஷ்புவின் கோரிக்கையை அரசியல்வாதிகள் மனு வாங்கியதும் மறந்துவிடுவார்களே, அதைப் போல மறந்தே விட்டார். இதனால் கடும் ஏமாற்றத்தில் இருந்தார் குஷ்பு.
பொன்னை வைத்த இடத்தில் பூவை வைக்கிற நினைப்பில், அஜீத் இல்லேன்னா அவரது வியாபாரத்தை தொலைவில் இருந்தாவது டச் பண்ணுகிற அளவுக்கு ஒரு ஹீரோவை பார்ப்போம் என்று காத்திருந்தார் குஷ்பு. அந்த நினைப்பில் ஒரு கூடை சர்க்கரையை கொட்டியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இந்த சின்ன குஷ்புவுக்கும் பெரிய குஷ்புவுக்கும் கொஞ்ச நாட்களாக நல்ல தொடர்பு இருக்கிறது. அந்த உரிமையில் ‘நான் உங்களுக்கு சிவகார்த்திகேயன் கால்ஷீட் வாங்கி தர்றேன்’ என்றாராம்.
சொன்ன வேகத்தில் சிவாவிடம் பேச, அந்த பக்கமும் ஓ.கே. ஆனால் ஒரு கண்டிஷன். ‘இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருந்தா நல்லாயிருக்கும்’ என்றாராம் சிவகார்த்திகேயன். அதை அப்படியே குஷ்புவிடம் சொல்லியிருக்கிறார் ஹன்சிகா. குஷ்பு அதே வேகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க, கடந்த சில வாரங்களாகவே சிவா மீது தனி அன்பில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான். சிவகார்த்திகேயன் படமா? அப்படின்னா நானும் ஓ.கே என்றாராம்.
ஏன்? விஜய் டி.வி விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய உருக்கமான பேச்சுதான் அதற்கு காரணம். அந்த நிகழ்ச்சியில் மறைந்துவிட்ட தன் அப்பாவை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன், ‘நான் உயிரோடு இருக்கும்போது எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே செய்யல. இந்த விருதை அவரது படத்துக்கு பக்கத்திலேயே வைத்திருப்பேன். இது ஆஸ்கர் விருதை விட உயர்வானது’ என்றெல்லாம் உருக்கமாக பேச, கேட்டுக் கொண்டிருந்த ரஹ்மான் கண்களில் ரெண்டு சொட்டு கண்ணீர்.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள்தான் குஷ்பு இந்த பிராஜக்ட் பற்றி பேசினாராம் ரஹ்மானிடம்.
சொல்ல மறந்தாச்சே… இந்த படத்திற்கான முதல் ஸ்டெப்பை எடுத்துக் கொடுத்த ஹன்சிகா மோத்வானிதான் மறுபடியும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார். சுந்தர்சி இயக்குகிறார்.
siva anna super…great combo siva hansika sundar .c and ar rehman..kandippa blockbuster than..