அஜீத் படம் வரும்போது நம்ம படத்தையும் விட்டாலென்ன? சிவகார்த்திகேயனின் திகீர் யோசனை?

இந்த பொங்கல் வெட்டு குத்தில்தான் முடியும் போலிருக்கிறது. அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள, இவற்றுடன் நானும் வருவேன் என்று முண்டா தட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வரும் காக்கிசட்டை கிட்டதட்ட முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்களை லிங்கா ரிலீஸ் தினத்தன்று வெளியிட விரும்பிய சிவகார்த்திகேயன், அதை நிறைவேற்றியும் விட்டார். அப்படியே ‘படத்தை பொங்கலுக்கு விட்டா என்ன?’ என்கிறாராம் தனது ரெகுலர் டச் ஃபிரண்ட்ஸ் வட்டாரத்தில்.

ஐயோ… பொங்கலுக்கா? அஜீத் படம் வருதே என்று ஆசைக்கு அணைபோடும் நண்பர்களிடம், ‘ஏன் அஜீத் சார் படம் வரும்போது என் படம் வந்தால் என்ன தப்பு?’ என்கிறாராம். இப்படியெல்லாம் கிளப்பிவிடுகிறார்களா, அல்லது அவரது விருப்பமே அதுதானா என்றெல்லாம் குழம்பித் தவிக்கிறது கோடம்பாக்கம். இந்த தகவல் மெல்ல மெல்ல தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் வட்டாரங்களில் கசிய, மேற்கூறிய ஏரியாக்களில் ஒரே திகில் பிகில்.

‘விஜய் சேதுபதியும் சிவகார்த்தியேனும் ஒரே நேரத்துல ஃபீல்டுக்கு வந்தாங்க. அந்த தம்பி எடுத்த எக்குத்தப்பான முடிவால், பல விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம். ஆனால் அடுத்த ரஜினி படம் மாதிரி, அள்ளிக் கொட்டியது சிவகார்த்திகேயன் படங்கள்தான். அதுக்கு காரணம், பெரிய படங்கள் எதுவும் வராத நேரத்தில் தன் படங்களை அவர் ரிலீஸ் பண்ணியதுதான். இப்போ எந்த வேஸ்ட் லேண்ட் அவர் மனசை கலைச்சுதோ? இப்படி அஜீத்தோட மோதுறேன்னு கிளம்புறாரே… பகவானே குழந்தைக்கு நல்ல ரூட்டுல வழி காட்டு’ என்று வெளிப்படையாக புலம்பவே ஆரம்பித்துவிட்டார்கள்.

வீம்புக்கு காம்பை மெல்றது பல்லுக்குதான் கேடு! சிவாவுக்கு புரியுமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தாத்தா சிவாஜியின் களங்கத்தை துடைத்த பேரன் விக்ரம்பிரபு?

சினிமாவில் கம்பு சண்டையெல்லாம் கரையேறி அநேக வருஷமாச்சு. எம்ஜிஆர் கம்பு சுத்துற அழகே தனி என்று கும்பல் கும்பலாக தியேட்டருக்கு போன காலம் ஒன்றுண்டு. எங்க தலைவர்...

Close