சிங்கப்பூர்ல சிங்கிள் டிராக்! ரஜினி, கமல், விஜய், சூர்யா வரிசையில் நெக்ஸ்ட் ஸ்டெப் வைக்கும் சிவகார்த்திகேயன்!

‘யாரும் தடுக்க முடியாது. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திட்டமிட்டபடி வெளியே வரும்’ என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படு ஸ்டிராங்காக கூறிக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல ரஜினி முருகன் பிரமோஷன்களும் துவங்கிவிட்டன. முதல் கட்டமாக சிங்கிள் டிராக் ரிலீஸ்! அப்படின்னா? அதான்ப்பா… ஒரு பாடலை முதல்ல ரிலீஸ் பண்றாங்க. அதுவும் சிங்கப்பூர்ல!

பொதுவாகவே டி,இமானும் சிவகார்த்திகேயனும் இணைந்தால் அந்த படத்தின் பாடல்கள் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. ‘ஊதாக்கலரு ரிப்பன்’ங்கிற ஒரு அடையாளம் போதும் அதை சொல்வதற்கு! இந்தப்படத்திலும் அப்படிதான் மனசை வாரி அள்ளிக் கொள்கிற மாதிரி பாடல்களை போட்டிருக்கிறாராம் டி.இமான். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என்றொரு பாடல். அந்த பாடலைதான் சிங்கப்பூரில் வெளியிடவிருக்கிறார்கள்.

வருகிற 29 ந் தேதி சன்டெக் சிட்டியில் இந்த பாடலை வெளியிடப் போகிறார்கள். டி.இமான், சிவகார்த்திகேயனுடன் படக்குழுவினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை காண இப்பவே முண்டியடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர். கமல், ரஜினி, விஜய், சூர்யா என்று வெளிநாட்டில் பாடல் வெளியீட்டு விழா வைக்கிற நட்சத்திர வரிசைக்கு சிவகார்த்தியேனும் தாவியிருப்பது அவரது ரசிகர்களை என்னவாக்கியிருக்கிறது?

ஒரே ஆஹா ஓஹோதான்!

Read previous post:
” massu engira masilamani” kochi press meet

Close