வதந்தி கிளப்பியவர்களின் வாயை அடைத்தார் சிவகார்த்திகேயன்!

இல்லாத அடுப்பை பற்ற வைத்து, வராத விருந்தாளிக்கு வத்தக்குழம்பு வைக்கறதுல பேமஸ் தமிழ்நாடும், வாய் ஜாலத்தில் கரைகண்ட வம்பளப்பாளர்களும்தான். அவர்களில் சிலரால் கிளப்பிவிடப்பட்ட சங்கதிதான் அதுவும். ஒரு நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், கமல் மகள் ஸ்ருதியை தரக்குறைவாக கிண்டல் செய்தார் என்பதுதான் அது.

அதற்கப்புறம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஷுட்டிங் மதுரை ஆரப்பாளையம் மற்றும அதை சுற்றிய பகுதிகளில் முப்பது நாட்களுக்கும் மேலாக நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் வந்து “எங்க வீட்டு பொண்ணை பற்றி எப்படி பேசலாம்?’ என்று கேட்காத விஷமிகள், கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே பிளைட்டில் வரும்போது, கமலை மட்டும் முன்னே அனுப்பிவிட்டு பின்னே வருகிற சிவகார்த்திகேயனை தாக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்வியின் வாலை பிடித்துக் கொண்டு பின்னாலயே நடந்த சிவகார்த்திகேயன் வட்டாரத்திற்கு புதுசு புதுசாக சில தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தூண்டிவிட்டவன் விரைவில் மாட்டுவான் என்கிறது அந்த தகவல்கள்.

அது போகட்டும்… ஸ்ருதி பற்றி சிவகார்த்திகேயன் தரக்குறைவாக பேசினார் என்று கிளப்பிவிட்டார்கள் அல்லவா? அவர்களின் வாய்க்கு மூடி போடும் விதத்தில் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. விரைவில் துவங்கவிருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் ஸ்ருதி. இதற்கு கமலின் பரிபூரண ஆசியும் கிடைத்திருக்கிறதாம்.

‘கிளப்பிவிட்டவர்களின்’ முகத்தில் கிலோ கணக்கில் வெண்ணை வழியுமே?

Read previous post:
“ எலி புழுக்கை கூட தேறல… ” கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு மீது ‘சீட்டிங் ’ புகார்!

வடிவேலுவின் முன் கதை சுருக்கம் ரொம்ப போர் அடிக்கும் என்பதால் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். இன்று சென்னை நகர காவல் ஆணையரை சந்தித்து ஒரு கடுமையான புகாரை...

Close