திடுக்! சிவா விஷயத்தில் குட்டையை குழப்பிய விநியோகஸ்தர்

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற இருவரிடமும் நான் கை நீட்டி முன் பணம் வாங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் சிவா.

எஸ்.கே வுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மேற்படி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வேறொரு கூட்டமும் இயங்கிவர, ரெமொ படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம் போட்ட சேம் சைட் கோல், சிவகார்த்திகேயனை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. ‘’சிவாவை வளர்த்து விட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், மற்றும் முன்தொகை கொடுத்த வேந்தர் மூவிஸ் மதன். ஸ்டுடியோகிரீன் ஞானவேல் மூவருக்கும் கால்ஷீட் கொடுப்பதுதான் சரி…” என்று நேரடியாகவே பேட்டி கொடுத்திருக்கிறார்.

திடீரென அவர் நாக்கு மாறியது ஏன்? அல்லது அவர் சொல்வதுதான் சரியா? என்பதெல்லாம் இனிமேல் விவாதிக்க வேண்டிய தனி புலனாய்வு எபிசோட்.

இந்த விவகாரத்தை பற்றி பேசிய அவர், அப்படியே போகிற போக்கில் விஷாலையும் போட்டு உருட்டித்தள்ளியதுதான் ஆஹா ஓஹோ!

இது ஒரு கட்டப்பஞ்சாயத்து. இதில் தலையிட விரும்பவில்லை’’ என்று விஷால் சொன்னாரல்லவா? அதற்கு பதிலளிக்கும் வகையில் ‘’கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்றால் அதன் மூலமாகவே உங்கள் மதகஜராஜாவையும், விஜய்சேதுபதியின் இடம்பொருள் ஏவலையும் ரிலீஸ் செய்திருக்கலாமே?” என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியன்.

நாரதர் கலகம்! அதுலதான் உருளுது உலகம்!!

To listen audio Click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Vishal Production No.7 New Film Pooja Stills Gallery

Close