கவுண்டமணி ஆசி! கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

காமெடியின் அடையாளம் கவுண்டமணி! இன்று எந்த சேனலை திருப்பினாலும், டி.வி பொட்டியெல்லாம் அதுவாகவே நகர்ந்து கொள்கிற அளவுக்கு உதைத்துக் கொண்டிருக்கிறார் கவுண்டர். நிலக்கரியின் அருமை வைரமாகும்போதுதான் தெரியும் என்பதை போல, ஒரு காலத்தில் அடிக்கிறாரு… உதைக்கிறாரு… என்று அவரை குறை சொன்ன வாயெல்லாம் இன்று, “கவுண்டரை போல வருமா?” என்று பேச ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி எல்லா ஹீரோக்களுக்கும் “எனக்கு கவுண்டமணி அண்ணன் கூட நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்” என்று பேட்டி தருகிறார்கள். ஆசைப்படுகிறார்கள். தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனெல்லாம் அவரது பரம விசிறிகள்.

ஆனால் அதற்கும் நேரம் ஒதுக்கி நேரில் சென்றால்தானே நடக்கும்? கவுண்டரே வீட்டுக்கு வீடு டோர் டெலிவரியாக வருவாரா என்ன? “நான் இன்னைக்கு இந்தளவுக்கு சிரிக்க சிரிக்க பேசுறேன்னா அதுக்கு இன்ஸ்பிரேஷன் கவுண்டரண்ணன்தான்” என்று தனது பேட்டி ஒன்றில் கூறிய சிவகார்த்திகேயன், அதற்கென நேரம் ஒதுக்கி அவரை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். “தம்பி… உன் படமெல்லாம் பார்க்குறேன். நல்லா வருவே” என்று வாழ்த்தினாராம் அவரும்.

பொதுவாகவே தன்னை விட மூத்தவர்களை சாதித்தவர்களை நேரில் சென்று சந்திப்பது நல்ல விஷயம் என்று நம்புகிறவர் சிவகார்த்திகேயன். ஊரே கூடி நின்று பரவை முனியம்மாவுக்கு பன்னீர் தெளிப்பதற்கு முன்பே, நைந்து கிடக்கும் அவரை சந்தித்து சைலண்ட்டாக உதவி வந்தவர் சிவகார்த்திகேயன். மூத்தோர் சொல் கேட்பது மட்டுமல்ல, மூத்தோரை நேரில் சென்று பார்ப்பதும் புண்ணியமே!

நல்லா சேருங்க சிவா!

Read previous post:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்! எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்கப்பா?

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’! சற்றே மாநிறமாக இருக்கும் அபிநேந்திரன் தான் இயக்குகிற படத்திற்கு இப்படியொரு தலைப்பை வைத்திருப்பது பெரிய குறையொன்றுமில்லை. ஆனால் படத்தின் மற்றொரு...

Close