நேர்ல வர்றாரு சிவகார்த்திகேயேன்! ரசிகர்களை உற்சாகப்படுத்த திட்டம்

ஒரே நேரத்தில் திரைக்கு வந்து டிராபிக் ஜாம் பண்ணாதீங்க. ஆளுக்கொரு வாரம், அழகா வாங்க… அள்ளுங்க கலெக்ஷனை என்று கூறிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். அதன்படி மான் கராத்தே, நான் சிகப்பு மனிதன், தெனாலிராமன் என்று வாரம் ஒருவராக வரிசை கட்டி நிற்க சம்மதித்தார்கள். கலெக்ஷனும் ஆஹா ஓஹோ…

இந்த நிலையில் அவரவர் படத்தை பூஸ்ட் பண்ணுகிற வேலையில் அவரவர் இறங்கினால் இன்னும் இன்னும் துட்டுதானே? அதுமட்டுமல்ல, உயிருக்குயிரான ரசிகர்களை நேரில் சந்தித்த மாதிரியும் ஆச்சு. இப்படியொரு திட்டத்தோடு கிளம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டி.வி யில் வந்த காலத்திலிருந்தே டி.வி பெட்டி வழியாக வீட்டுக்குள் நுழைந்து ‘சவுக்யமா பாட்டி’ என்று கேட்கிற அளவுக்கு மானசீக மகனாகவும் மனசுக்கு பிடித்த பேரனாகவும் ஆகியிருக்கிறார் அவர். டிவி காலத்திலேயே அப்படி என்றால், இத்தனை வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த நேரத்தில் தியேட்டர் விசிட் அடித்தால் இவரை பார்க்கவென்றே திரளுமல்லவா கூட்டம்?

அதனால் தமிழ்நாடு முழுக்க மான் கராத்தே ஓடும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கப் போகிறாராம் சிவகார்த்திகேயன். இவருடன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் ஒன் அண் ஒன்லி ஹன்சிகாவும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

எலக்ஷன் நேரம் என்பதால் இதற்கு போலீஸ் ஒப்புக் கொள்ளுமா? சிவ கார்த்திகேயன் – ஹன்சிகா வந்தால் ஒவ்வொரு தியேட்டரும் ஒரு மாநாட்டு திடலாகி விடுமே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா? இதையெல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ரூட் க்ளியர் ஆனால், ஒவ்வொரு தியேட்டருக்கும் உங்கள் அபிமான சிவாவின் அழகான விசிட் இருக்கிறது. தயாராகுங்கள் ரசிகர்களே… !

1 Comment
  1. dinesh says

    Superb siva anna coming to all theatres..hope to see him in my city.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தெனாலிராமனுக்கு வரிவிலக்கு இல்லை – வடிவேலு அதிர்ச்சி

நீதிமன்ற ஆணை வந்ததிலிருந்தே பேதியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. வரிவிலக்கு ஆணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். அப்படியென்றால் கடைசியாக வரிவிலக்கு வாங்கிய படம் மான் கராத்தே...

Close