சம்பளத்துல பத்து சதவீதம் ‘ அதுக்கு ’ சிவகார்த்திகேயன் திட்டம்

எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும், ‘நம்ம தலைவர் நடிச்ச படம்டா… ஓட வச்சுரணும்’ என்று ரிப்பீட் ரிப்பீட்டாக அடித்து அந்த படத்துக்கு கூட்டம் சேர்க்கும் ரசிகர்கள் இருந்தால், அது அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஆகாயத்தை விஞ்சிய பேரதிருஷ்டம். ஆந்திராவில் அப்படியெல்லாம் வெறிபிடித்த ரசிகர்களை பார்க்க முடிகிறது. நம்ம ஊரில் சற்று உஷாராகவே இருக்கிறார்கள் இவர்கள்.

‘சைட்ல துட்டு வெட்டுங்க, நாங்க டிக்கெட்டை வித்து கூட்டம் சேர்க்குறோம். கூச்சல் போடுறோம்’ என்றெல்லாம் வியாபாரம் பேசுகிற அளவுக்கு தேறி வருகிறார்கள். கட் அவுட்டுக்கு பால் ஊத்துனா இவ்ளோ… பீர் ஊத்துனா இவ்ளோ என்று டேரிஃப் அடிக்கிற அளவுக்கு போயிருக்கிறதாம் நிலைமை. ஒருவகையில் இது சந்தோஷம்தான் என்றாலும், சம்பந்தப்பட்ட நடிகர்களின் நெற்றி வீங்கி, மூக்கு புடைக்கிற அளவுக்கு பில் போடுகிறார்களாம் சில மன்ற தலைவர்கள். இருந்தாலும் கூட்டம் சேர்க்காமல் ஆட்டம் நடக்காது என்பதில் தெளிவாக இருக்கும் சில நடிகர்கள் வாங்குகிற சம்பளத்தை வாரியிறைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

சமீபத்தில் சந்தானத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கிற கடும் போட்டியில், கட்டி வெல்லத்தை தட்டிக் கொண்டு போவது ரசிக கண்மணிகள்தானாம். சமீபத்தில் வெளியான சந்தானம் படத்திற்கு ஒவ்வொரு தியேட்டருக்கும் குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஐந்து லட்சம் வரைக்கும் வாரியிறைக்கப்பட்டதாக காதை கடிக்கிறார்கள் இங்கே. இந்த பண பரிவர்த்தனை, பட்டுவாடா பரபரப்பு எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன், தனது சம்பளத்திலிருந்து இனி பத்து சதவீதத்தை ரசிகர் மன்ற செலவுக்கு ஒதுக்குவதாக முடிவெடுத்திருக்கிறாராம்.

இந்திய பொருளாதாரம் ரொட்டேஷன்லேயே இருக்கணும். இல்லேன்னா புவாவுக்கு பிரச்சனைதான். ஹீரோக்களின் இந்த வியத்தகு கொள்கை மன்மோகன்சிங்கையை மறுபடிப்பு படிக்க வைக்கும் போலிருக்கே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் பற்றி பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்… பேஸ்சவே மாட்டேன்! சுந்தர்சியின் மவுனராகம்

குஷ்புவும் ட்விட்டரும் கூடப்பிறந்தவர்கள் போலிருக்கிறது. குட்மார்னிங்கில் துவங்கி, குட் நைட் வரைக்கும் அவ்வப்போது எதையாவது தட்டிவிட்டுக் கொண்டேயிருப்பார். அப்படி அவர் தட்டிய ட்விட் ஒன்று, அஜீத்தையும் சேர்த்து...

Close