கவுண்டமணிகிட்ட ரெண்டு மணி நேரம் பேசினேன்! எதுவும் வெளியில் சொல்ற ரகம் இல்ல! சிவகார்த்திகேயன் சிரிப்போ சிரிப்பு

இப்படியொரு சந்தர்ப்பம் எந்த புது இயக்குனருக்கும் வாய்க்குமா தெரியாது. ஆனால் ஆரோக்கியதாசுக்கு வாய்த்தது. கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கிய தாஸ் இயக்கிய படம் 49 ஓ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நேரில் வந்திருந்தார் காமெடி திலகம் கவுண்டமணி. அவர் சினிமாவில் நடிக்க வந்து 39 ஆண்டுகள் ஆகிறதாம். இந்த 39 ஆண்டுகளில் ஒரு பாடல் வெளியீட்டு விழாக்களுக்கும் வந்ததில்லை கவுண்டர். எந்த சினிமா விழாவிலும் மேடையேறி பேசியது இல்லை. அந்த கண் கொள்ளா காட்சியை கண்டு ரசிக்கவும், அவர் பேசுவதை காதார கேட்டு மகிழவும் வந்திருந்த பெரும் கூட்டத்தில் சத்யராஜும், சிவகார்த்திகேயனும் முதல் ஆளாக இருந்தார்கள்.

நான் கவுண்டமணி சாரோட பரம ரசிகன். அதுவும் சத்யராஜ் சாரும் இவரும் சேர்ந்தாங்கன்னா ரகளையா இருக்கும். நான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்கும் போது சத்யராஜ் சார்ட்ட, கவுண்டமணி சார் பற்றி நிறைய விசாரிப்பேன். அவர் கதை கதையா சொல்லியிருக்கார். அதையெல்லாம் கேட்டா விழுந்து விழுந்து சிரிச்சே ஆகணும். ஆனால் எதையும் வெளியில் சொல்லவே முடியாது. அதற்கப்புறம் கவுண்டமணி சாரை அவர் ஆபிஸ்ல சென்று பார்த்தேன். இரண்டு மணி நேரம் அவரை பேச விட்டுட்டு நான் ரசிச்சுகிட்டேயிருந்தேன். அந்த நேரத்தில் கூட அவர் பேசிய எதையும் வெளியில் சொல்ல முடியாது. கடந்த பல வருஷமா அவர் தமிழ் படங்கள் எதையும் பார்க்கறதில்லன்னு சொன்னாரு. ஆனால் அவருக்கு ஊதா கலரு பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாரு. சந்தோஷமா இருந்திச்சு. எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கு. கவுண்டமணி சாரும், சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கணும். அதில் நானும் நடிக்கணும்!

இவ்வாறு சிவ கார்த்திகேயன் பேசி முடிக்க, அதை மிக உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார் கவுண்டர்.

சிவா இப்படி சிலாகித்தார் என்றால், கவுண்டரின் நீண்டகால தோஸ்த் சத்யராஜ் சும்மாயிருப்பாரா? சரவெடிதான் அவர் பேச்சு. ஷுட்டிங் ஸ்பாட்டில் இவரும் கவுண்டரும் சேர்ந்து கொண்டு யாரையெல்லாம் எப்படியெல்லாம் கிண்டல் பண்ணுவார்கள் என்று அவர் சொல்ல சொல்ல, பிளாஷ்பேக்குக்கு போய் சிரித்துக் கொண்டிருந்தார் கவுண்டர்.

இறுதியாக விசிலும் கைத்தட்டல்களும் பிய்த்து உதற, மைக்கை பிடித்தார் கவுண்டர். இந்த கதையை எங்கிட்ட சொல்றதுக்கு வந்தாரு டைரக்டர். ஏம்ப்பா… நீட்டி முழக்காம முன்னாடியும் விட்டுட்டு பின்னாடியும் விட்டுட்டு நடுவுல ரெண்டு வரி சொல்லுன்னு சொன்னேன். நச்சுன்னு ரெண்டு வரி சொன்னார். அதற்கப்புறம்தான் கதையை முழுசா கேட்டேன். இந்த படத்துக்கு கே மியூசிக் போட்ருக்கார். பேருக்கு ஏத்த மாதிரியே கேக்குற மாதிரியிருக்கு. நான் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தைதான் சொல்வேன். 49 ஓ இஸ் எ பெஸ்ட் பிலிம். மறுக்கா மறுக்கா சொல்றேன். 40 ஓ இஸ் எ பெஸ்ட் பிலிம். என்று அதையே சொல்லி எல்லாரையும் சிரிக்க வைத்துவிட்டு கீழே இறங்கினார் கவுண்டமணி.

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. கவுண்டர் இன்னும் அதே எனர்ஜியோடு இருக்கிறார். இருக்கிறார். இருக்கிறார்…

49 ஓ ட்ரெய்லரை காண இங்கே க்ளிக் செய்யவும் https://youtu.be/Fwt8CWA35qw

1 Comment
  1. R.Gopi says

    //கவுண்டமணி. அவர் சினிமாவில் நடிக்க வந்து 29 ஆண்டுகள் ஆகிறதாம்.//

    He has acted with Super Star Rajni in the movie 16 Vayadhinile…. which was released in 1978-78 i think….

    I think your report is wrong…. Goundamani is in the cine field for more than 40 years!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை!

கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான்...

Close