சிவகார்த்திகேயனை திடுக்கிட வைத்த இயக்குனர் கம் தயாரிப்பாளர்!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த திருத்தம். அதற்கு முன்பு வரை இருந்த சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் அதற்கப்புறம் என்னவானது என்பதை மார்க்கெட்டில் விசாரித்தால், மயக்கமே வந்துவிடும். அந்தளவுக்கு இன்றைய தேதிக்கு டாப்போ டாப் அவர். ஏழு கோடி வரைக்கும் சம்பளம் தர தயாராக இருக்கிறார்களாம் இங்கே. இந்த நேரத்தில் அவரை அநியாயத்துக்கு நசுக்கி ஆயிலை பிழிய நினைக்கிறாராம் ஒரு தயாரிப்பாளர். அவர் யார்? அவருக்கு ஏனிந்த கருமித்தனம்? என்றெல்லாம் கவலையோடு நோக்குகிறது கோடம்பாக்கம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஷுட்டிங்கின் போது ஹீரோ, இயக்குனர் இருவரையும் சந்தித்த அந்த தயாரிப்பாளர், நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணலாம் என்றாராம். ஆஹா… பெரிய கம்பெனி, பெரிய டைரக்டர் கேட்கிறார் என்று உடனடியாக தலையாட்டினார் சிவகார்த்திகேயன். சம்பளம் ஒரு கோடி என்று பிக்ஸ் பண்ணி ஒரு கணசமான தொகையை அட்வான்சாகவும் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார் தயாரிப்பாளர் கம் இயக்குனர்.

அதற்கப்புறம் வந்த இரண்டு படங்களும் நல்ல கலெக்ஷன் அடைய, சிவகார்த்திகேயனை குட்டி ரஜினியாக கொண்டாடியது தமிழ்சினிமா. இப்போது வாங்கிய அட்வான்சுக்கு இவர் படத்தில் நடிக்க வேண்டுமே? மார்க்கெட்ல எனக்கு இப்போ இவ்ளோ சம்பளம் என்று சிவகார்த்திகேயன் ஆரம்பிக்க, முன்னாடி எவ்வளவு பேசி அட்வான்ஸ் வாங்குனீங்களோ, அதுக்கு மேல பைசா கூட தர முடியாது என்கிறாராம் இயக்குனர்.

ஒரு ஹீரோவோ, டைரக்டரோ, மார்க்கெட்டில் அவரது வேல்யூ குறைந்தால் பேசிய சம்பளத்தை குறைத்துக் கொடுக்கிற வழக்கம் இப்பவும் இருக்கிறது. அப்படியென்றால் மார்க்கெட் ஏறினால் அதிகப்படுத்திதானே தர வேண்டும்?. சினிமாவில் இவ்வளவு காலம் குப்பை கொட்டியவருக்கு இது தெரியாதா என்கிறது சிவா டீம். இருந்தாலும் ஒரு கோடிக்கு மேல நோ மணி… என்கிறாராம் இவர்.

அப்படிப்பட்ட டைரக்டர் யாரென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா? அவர்தான் லிங்குசாமி…!

1 Comment
  1. dinesh says

    lingusamy should give correct salary based on sivakarthikeyan market..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஞ்சலிக்கு தடை! தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அதிரடி முடிவு

கோட் சூட் போடாத கோபியாக ‘நீயா நானா?’ யுத்தம் நடத்திக் கொண்டிருந்த மு.களஞ்சியத்திற்கு முதல் ஆறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சியில் மைக்கை பிடிக்கும் அவர்,...

Close