சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை?

பேரு வச்சியே, சோறு வச்சியா? நிலைமைதான் பல படங்களுக்கு! படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக ஒரு ஏரியாவிலிருந்து பணம் கிடைக்குமே, அந்த ஏரியாவிலும் இப்போது கனத்த பூட்டு.

யெஸ்… சேட்டிலைட் ரைட்ஸ் என்று சொல்லப்படும் தொலைக்காட்சி உரிமை மூலம் லம்ப்பாக ஒரு தொகையை கவுரமாக பெற்று வந்த தயாரிப்பாளர்கள் பலருக்கு இப்போது கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைமை. பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களை மட்டும் விலைக்கு வாங்குகிறார்கள் சேனல்காரர்கள். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்கள் இருந்தால் ஓரளவுக்கு விலை போகிறது. அதுவும் இல்லாதவர்களுக்கு குல்லாதான். எந்த படத்தையும் எந்த சேனலும் சீண்டுவதில்லை. ஏன்? அது பெரிய கதை.

இப்போது என்ன பிரச்சனை? கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தை ஆறு கோடிக்கு வாங்கிக் கொள்வதாக உறுதி அளித்திருந்தது ஒரு சேனல். படம் வெளியாகிற நாள் வரைக்கும் இப்படி நம்பிக்கை கொடுத்து வந்த சேனல், படம் வெளியான பின்பு ‘வேணாம்’ என்று கூறிவிட்டது. இத்தனைக்கும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபலமான ஹீரோ, ஹீரோயின், காமெடியனும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தை வாங்குவதா, வேண்டாமா என்று முடிவெடுக்கிற அதிகாரம் இங்கில்லையாம் இவர்களுக்கு. எல்லா முடிவும் டெல்லியில். அங்கிருந்து வந்த தகவல்தான் இந்த ‘வேணாம்’.

இப்படி திடீரென காலை வாரினால் சும்மாயிருப்பாரா தயாரிப்பாளர்? ஏற்கனவே சூடு பார்ட்டி அவர். விறுவிறுவென சேனல் ஆபிசுக்கு போனவர், அங்கு தன்னிடம் வியாபாரம் பேசிய சேனல் ஹெட்டிடம் மல்லுக்கு நிற்க ஆரம்பித்துவிட்டார். பயங்கர தள்ளு முள்ளு வேறு.

யார் பக்கம் தவறு? யார் பக்கம் நியாயம்? என்றெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை திரையுலகம். ‘படத்தை வாங்குறேன்னு சொல்லிட்டு ஏமாத்தறது தப்பு. அதனால் நல்லா வாங்கட்டும்’ என்கிறது குதூகலமாக!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Porkkuthirai Movie Trailer

http://youtu.be/81pzyttBWr8

Close