கம்பெனி நல்லா வரணும்… பாபா முன் பிரசன்னா-சினேகா!

தமிழ்சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் ஷிர்டி சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கிறார்கள். நல்லதோ, கெட்டதோ, அவரது பாதம் பணியாமல் இவர்கள் எந்த வேலையையும் தொடங்குவதேயில்லை. அப்படி வணங்குகிறவர்களுக்கு சில நேரங்களில் சோதனையும் கொடுத்து வருகிறார் பாபா. இருந்தாலும், பாபாவே சரணம் என்கிற சரண கோஷம் ஒலிக்காத சினிமா கம்பெனிகளையும் ஹீரோ ஹீரோயின்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த பாபா நம்பிக்கையில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் சினேகா. பிரசன்னா தம்பதி. இதில் பிரசன்னா எப்படியோ? சினேகா பல்லாண்டுகளாவே ஷிர்டி சாய்பாபாவின் பக்தை. அந்த நம்பிக்கையில் இந்த தம்பதி இணைத்து படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கிறார்கள் அல்லவா, அதன் பெயர் தாங்கிய விசிட்டிங் கார்டை வைத்து மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்களாம்.

சினிமா நல்ல நிலையில் இருக்கிறதா, ஐசியூ வில் இருக்கிறதா என்றால் இருவேறு பதில்கள்தான் இங்கே கிடைக்கும். சற்று விஐபிகளாக இருந்து விட்டால் போதும். அவர்கள் தயாரிக்கும் படங்களை வாங்கி வெளியிட முன்னணி நிறுவனங்கள் தயாராக இருப்பதால், ‘சினிமா நல்லாயிருக்கு’ என்றும் கூறலாம். அதே நேரத்தில் எடுத்த படத்தை தெரு தெருவாக கூவினாலும் வாங்க ஆளில்லை என்கிற நிலைமை இன்னொரு சாரருக்கு. அப்படின்னா சினிமா நல்லாயில்ல என்றுதானே அர்த்தம்? இதில் சினேகா, பிரசன்னா படத்தை பூஜை தினத்தன்றே வாங்க விநியோகஸ்தர்கள் க்யூவில் நிற்கலாம். அந்த வகையில் பாபா ஆசியோடு படம் எடுக்க கிளம்புகிறது கேம் சேஞ்சர் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம்.

ம்ம்ம் அதான் தம்பதிகளின் புதுப்பட நிறுவனத்தின் பெயர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இசைகேட்டு வளருமே ராஜா வச்ச மரம்!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான...

Close