என்ன வெங்காயத்துக்கு எழுதணும்? ஓ… சினேகன் குத்தியது அவரையா?

வி.தக்ஷி இசையில் எஸ்.டி.குணசேகர் இயக்கியுள்ள ‘களவு செய்யப் போறோம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சினேகனின் பேச்சில்தான் செம காரம்! பொதுவாகவே ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் வந்த வேலையை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்வது சினிமா மேடைகளில் சகஜம். இந்த மேடையை பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வக்காலத்து வாங்கும் மேடையாக்கிக் கொண்டார் சினேகன். “நான் சில நிகழ்ச்சிகளில் பேசும்போது அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்கேன். அதனால் உலகம் முழுக்க என்னோட ரசிகர்கள் எங்கிட்ட கோவிச்சுகிட்டாங்க”.

“அவர் மேல பல வழக்குகள் இருக்கு. நீங்க ஏன் அவருக்கு ஆதரவா பேசுறீங்க?” என்றெல்லாம் எங்கிட்ட சண்டை போட்டாங்க. நான் என் ரசிகர்களிடம் சொன்னது என்னன்னா, “ஒரு மனுஷன் பல அவமானங்களை தாண்டி வர்றதுதான் கஷ்டம். அப்படி அவரை இந்த சமூகம் கேவலமா பேசியிருக்கு. அதையெல்லாம் ஈஸியா எடுத்துகிட்டு முன்னுக்கு வந்திருக்கிறார் அவர். அதனால் நான் அவருக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுவேன்” என்று கூறினாராம். அதற்கப்புறம் சினேகன், அப்படியே டிராக்கை மாற்றி தன் தொழிலுக்கு வந்தார். அதாவது பாட்டெழுதுகிற விஷயத்திற்கு.

இந்த விஷயத்தில் அவரது கருத்து பலரது குரலாகவும் ஒலித்ததை ஒப்புக் கொள்ளதான் வேண்டும். “இப்போது சிலர் பாடல் எழுதுகிறார்கள். புரியாத வரிகளில் புரியாத அர்த்தங்களில் எழுதுகிறார்கள். யாருக்குமே அந்த வார்த்தைகளோட அர்த்தம் புரியலேன்னா என்ன வெங்காயத்துக்கு அப்படி எழுதணும்?” இதுதான் சினேகனின் காட்டமான கேள்வி. அவர் யாரை சொன்னார் என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருபர்கள் மத்தியில் ஒரு கிசுகிசுப்பு எழுந்தது. பலரும், “அவரு மதன் கார்க்கியை சொல்றாருப்பா” என்றபடியே கலைந்தார்கள்.

அப்படியாவா இருக்கும்?

3 Comments
  1. Alagu Raja says

    யார் சொன்னது மதன் கார்க்கி வரிகள் புரியாதுன்னு.. டங்கா மாரி,ஆலுமா டோலுமா என்ன புரியுதா ஏன் அவரை சொல்லி இருக்கலாம்ல.. சினேகனுக்கு ஐயா வைரமுத்தையும், மதன்கார்க்கி குறை சொல்வதை நிறுத்த வேண்டும். சினேகன் கிட்ட சரக்கு இல்ல யாரும் பாட்டு எழுத கூப்பிடல கோபம்…

  2. Prabhakaran says

    சினேகனுக்கு ஒழுங்கா பாட்டு எழுத வராது, இதுல கதாநாயகனா நடிக்கிறார் ஹி ஹி ஹி.. ஐயா நீங்க நடிச்ச 420 படம் பார்த்து இருக்கீங்களா..

  3. Suman says

    எங்கள் மண்ணின் மைந்தர் ஐயா வைரமுத்து மகன் மதன்கார்க்கி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை சினேகனுக்கு

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஃபிரண்ட்ஸ்… அதனாலதான்! விம்மி புடைக்கும் விமல்!

நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்.... இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குற ஊர்ல, நட்பு இன்னும் அப்படியே சுருங்காம இருக்குன்னா அதுக்கே தனியா...

Close