பாதி கதை சூரி மேல்! பரவாயில்லையாம் ஹீரோவுக்கு!

லெக் பீஸ் உனக்கு, நெஞ்செலும்பு எனக்கு என்ற கோட்பாடு வராத வரைக்கும் வயிறு நிறையப் போவதில்லை என்பதை ஓவர் நைட்டில் உணர்ந்துவிட்டார் உதயநிதி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமே சந்தானம்தான் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தாலும், கெத்து போன்ற படங்களில் காமெடிக்கு பெரிய வழி செய்து தரவில்லை அவர். விளைவு? படம் படுதோல்வி. அதற்கு முன்பு வந்த கதிர்வேலன் காதல் படத்திலும் காமெடிக்கு பெரிய ஸ்கோப் இல்லாமல் போனதால், அந்த படமும் அதோகதியானது.

ஒரு படம் என்பது ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்றால், காமெடி நடிகருக்கான இடத்தை சற்று தாராளமாக ஒதுக்கினால் ஒழிய நடக்காது என்பதை சற்று தாமதமாக உணர்ந்து கொண்ட உதயநிதி இப்போது செய்திருக்கும் வேலை நிஜமாகவே சூப்பர். கவுரவ் இயக்கத்தில் இவர் நடிக்கப் போகும் புதிய படத்தில் சூரியை கமிட் பண்ணியிருக்கிறார்கள். கதைப்படியே சூரிக்கு உதயநிதியளவுக்கு ரோல் இருக்கிறதாம்.

“உங்க ரெண்டு பேர்ல யாரு ஹீரோ?” என்று உதயநிதியிடம் கேட்கிற அளவுக்கு நிலைமை போகும் போல தெரிகிறது. “எவ்வித ஈகோவுக்கும் இடம் இல்ல. படத்தை மக்கள் ரசிக்கணும். அதுக்கு என்னவோ, அதை பாருங்க. சூரி ரோலை குறைக்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டாராம் உதயநிதி.

இப்பல்லாம் சூரி வாசல்லதான் சூறைத்தேங்கா! நடக்கட்டும் நடக்கட்டும்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பப் ஒன்று… பலகாரம் ரெண்டு! கவ்வத் துடித்த பூனைகளாக ஹீரோவும் மியூசிக் டைரக்டரும்!

ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ...

Close