சூரியின் பாலிடிக்ஸ் சுருண்டு போன இயக்குனர்

‘சேட்டை’ என்ற துர்நாற்ற படத்தை எடுத்தவர்தான் டைரக்டர் கண்ணன். அதற்கு முன்பாக அவர் எடுத்த ஜெயம்கொண்டான் படத்தையெல்லாம் இந்த சேட்டை வந்து காலி பண்ணிய கதையை விலாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கூட முதலில் இயக்குனராக கமிட் ஆனவர் கண்ணன்தான். அதற்கப்புறம் சந்தானம் என்ன நினைத்தாரோ, இவரை அனுப்பி விட்டு ஸ்ரீநாத்தை இயக்குனராக்கிவிட்டார்.

இப்போது நாம் சொல்லப் போவது கண்ணன் கதையோ, சந்தானம் கதையோ, ஸ்ரீநாத் கதையோ அல்ல. காமெடி சூரியின் கைவந்த பாலிடிக்ஸ் பற்றிதான். இந்த கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. விமல் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இன்றைய நிலவரப்படி விமலின் மார்க்கெட் கமர்கட் ரேஞ்சுக்கு கூட இல்லை. எனவே இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் சூரியை நம்பிதான் வியாபாரத்தை எதிர் நோக்கியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன்.

அண்மையில் ராயப்பனுக்கு அடிக்கடி போன் செய்து வந்த சூரி, சார்… நான் உங்களை தனியா மீட் பண்ணணும் என்று கூறி வந்தாராம். சந்தானம் மாதிரி தம்பியும் ஹீரோவா நடிக்கப் போவுது போலிருக்கு. அதுக்கு மஞ்ச தண்ணியோட வர்றதுக்குதான் அப்பாயின்ட்மென்ட் கேட்குது போலிருக்கு என்று சந்திப்பை தள்ளி தள்ளி போட்டு வந்தாராம் மைக்கேல் ராயப்பன். எப்படியோ ஒரு நாள் அவரை சந்தித்தும் விட்டார். வந்த இடத்தில் சூரி போட்டுக் கொடுத்ததுதான் டைரக்டர் கண்ணனை கண் கலங்க வைத்திருக்கிறதாம்.

சார்… படம் போக்கே சரியில்ல. காமெடிங்கிற பேர்ல ரொம்ப சீரியசா போயிட்டு இருக்கு. அதுவும் என் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிரிப்புன்னு ஏதாவது வந்தா, நீங்கள் சிரிக்கிற நபருக்கு ஆயிரம் பொற்காசுகள் தரலாம் என்று அளந்துவிட, அதிர்ந்தே போனாராம் ராயப்பன். என்னய்யா சொல்ற? உன்னை வச்சுதான் வியாபாரத்தையே யோசிச்சு வைச்சுருக்கேன் என்றவர், இயக்குனரை அழைத்து சூரியோட சீன் எல்லாத்தையும் ரீ ஷுட் பண்ணுங்க என்றாராம்.

பத்த வச்ச எலிக்கு இப்போ குத்த வச்சு வணக்கம் சொல்லிகிட்டு இருக்காராம் கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெயராமனை வாழ்த்தினார்களா ‘ பல ’ ராமன்கள்?

ரஜினியின் நிழலாகவே இருந்தவர் ஜெயராமன். அவருடன் தொடர்பிலிருந்த அத்தனை பேருக்கும் தெரியும் ஜெயராமனின் பணியும், பணி நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் பணிவும். ரஜினி லெப்ட்டில் திரும்பினால் என்ன அர்த்தம்?...

Close