அண்ணே… நான் அப்படியெல்லாம் சொல்லலேண்ணே! அஜீத் விஜய் சூரி ஒரு ரிலே ரேஸ்!

தலைப்பை நல்லா படிச்சிட்டீங்களா? இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை உலுக்கோ உலுக்கென உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது போதாதா? பிரஸ்சிடமிருந்து வர்ற போன் அதுக்காக இருக்குமோ என்று அஞ்சிக் கொண்டே அட்டர்ன் பண்ணுகிறார் சூரி. பத்த வச்ச படுபாவி எவனோ தெரியல, ஆனா, நம்மளை நிக்க வச்சு சுளுக்கெடுக்கிறாங்களே என்று நினைத்திருக்கலாம். இப்போதெல்லாம் போனை கூட எடுப்பதில்லையாம் சூரி.

அஜீத் நடிக்கும் ஏதோவொரு படத்தில் நடிக்க சூரியை அழைத்ததாகவும், அவர் ‘அஜீத் சார் படம்னா முடியாது’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல் உலவுகிறது கோடம்பாக்கத்தில். ஆனால் இது குறித்து 1333 பக்கத்திற்கு அறிக்கை வெளியிடவும் தயாராக இருக்கிறார் சூரி. என்னவென்று? ‘அதையெல்லாம் நம்பாதீங்க, டூப்புங்க’ என்று. நிஜத்தில் நடந்தது இதுதானாம். அஜீத் சாரோட நீங்க நடிக்கணும் என்று அழைத்த இயக்குனர் ஒருவர், கதையில் வரும் சுச்சுவேஷனையும் சொல்லியிருக்கிறார். அதன்படி அஜீத்தை இவர் ஏகத்திற்கும் கிண்டல் செய்வது போல வசனங்கள் இருந்ததாம்.

‘நான் அஜீத் சார் மேல பெரிய மரியாதை வச்சுருக்கேன். அவரைப்போய் நான் கிண்டல் செய்வது மாதிரி எப்படிங்க நடிக்கறது. என்னைய விட்ருங்க. நான் இன்னொரு சந்தர்பத்துல அவருடன் நடிச்சிக்கிறேன்’ என்று கூறிவிட்டாராம் சூரி. இதுதான் பிரச்சனை. ஆனால், இப்போதெல்லாம் விஜய்யின் பார்வை சூரியின் மீது பட்டிருக்கிறது. தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார். இந்த நேரத்தில் அஜீத்துடன் நடித்து, அது விஜய்க்கு பிடிக்காமல் போய்… இப்படியெல்லாம் சூரி யோசித்துதான் அப்படியொரு பதில் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

திங்கிற பரோட்டா மேல சத்தியமா கேட்டாலும், உண்மை வெளியே வராது போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!

‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன்...

Close