இது ஆஞ்சநேயர் சக்திடா! படப்பிடிப்பில் அரண்ட இயக்குனர்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே போன ராக்கெட் ரெண்டு நிமிஷம் நின்னு போச்சாம் தெரியும்ல? சனீஸ்வரன் பவர் அவ்வளவுடா… என்று வாட்ஸ் அப்பிலும், முக நூலிலும் பீதி கிளப்பி வந்தவர்களுக்கு அதெல்லாம் பொய்னு ஒரு குரூப்பும், இல்லேயில்ல… நிஜம் என்று இன்னொரு குரூப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ‘வைப்ரேஷன் சார்… வைப்ரேஷன்’ என்று ஆனந்த கூத்தாடுகிறார் ராம்கி ராமகிருஷ்ணன். ‘கமரகட்’ பட இயக்குனர்.
‘கோலிசோடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு, அதில் நடித்த அத்தனை பொடியன்களையும் இழுத்து வந்து தன் படத்தில் இணைத்துவிட்டிருக்கிறார் ராம்கி. இப்போது அவர்களெல்லாம் பொடியன்கள் இல்லை. அதுக்கும் மேல…! அதற்கேற்ப இந்த படத்தில் ப்ளஸ்டூ முடித்துவிட்டு காலேஜ் போகிறவர்களாக காண்பிக்கிறாராம். கோலிசோடா நடிகர்கள் மட்டுமன்றி இப்படத்தில் சாட்டை யுவன்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக இரண்டு அழகான ஹீரோயின்கள் என்று கமரகட் களைகட்டுகிறது.
காதல், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் இவற்றோடு ஆன்மீகத்தையும் சேர்த்திருக்கிறாராம். அதை நிரூபிப்பது போல, கமரகட் தலைப்பில் புள்ளிக்கு பதிலாக ருத்திராட்ச கொட்டையை வைத்திருக்கிறார். கமர்கட்டுன்னுதானே சொல்வோம்? அதென்ன கமரகட் என்றால், நடுவுல புள்ளி வேணாம்னுதான் என்று அதற்கும் ஒரு பதிலை வைத்திருக்கிறார் ராம்கி ராமகிருஷ்ணன். முட்டாய்தானேன்னு நினைப்போம். கவனமா கடிக்கலேன்னா பல்லை உடைச்சுரும் இல்லையா? அதற்காகதான் இப்படியொரு தலைப்பு என்றார்.
சரி… இந்த செய்தியின் தலைப்புக்கு இன்னும் வரலையே?
திருவண்ணாமலைக்கு அருகில் ஒரு சிறிய மலைமுகட்டில் ஹெலிகாம் கேமிராவுடன் போய் இறங்கிவிட்டார்களாம். அந்த மலையில் ஒரு ஆஞ்சநேயர் கல் இருந்திச்சு. ஹெலிபேட்டை இயக்குனா அந்த கல்லை சுற்றி சில மீட்டர்களுக்கு வேலையே செய்ய மாட்டேங்குது. அந்தளவுக்கு அங்க வைப்ரேஷன் இருக்குன்னு புரிஞ்சுகிட்டோம். அப்புறம் என்ன? அந்த இடத்தை ஷுட் பண்ணாமலே இறங்குனோம் என்றார்.
பீதிய கிளம்புறாங்களே….