குரங்கு வேற… குரோட்டன்ஸ் வேற… வௌங்குவீங்களா நீங்கள்லாம்?
‘குரங்குக்கும் குரோட்டன்சுக்கும் வித்தியாசம் இல்லையா? விளங்குவீங்களா நீங்கள்லாம்…’ என்று அகில உலக ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதற கதற மண் சோறு சாப்பிட வேண்டிய அவல நிலைக்கு தள்ளியிருக்கிறது கடந்த சில தினங்களாக வெளிவரும் ‘டகால்ட்டி’ செய்திகள். ஒரு சில ஊடங்களில், ஒரு சில அறியாப் பாவிகள் செய்த அட்டகாசம்தான் நிலைமை இந்தளவுக்கு முத்திப்போனதற்கு காரணம்.
விஷயம் பெரிசா இருக்கும் போலிருக்கே? யெஸ்… பெருசுதான்.
ஆந்திராவில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது என்னவென்றால், ‘எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் விபச்சாரம் பண்ணினா புடிச்சு உள்ள தள்ளுங்க’ என்றுதான். இதையடுத்து ஜரூராக வேலை பார்த்து வரும் போலீசார், சந்து பொந்துகளில் ‘சவுக்கியமாக’ இருக்கிற ஜோடிகளையெல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து அரளி சூப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் முன்னணி நடிகை ஸ்வேதா பாசுவை தொடர்ந்து சிக்கிய இன்னொரு நடிகை திவ்யா ஸ்ரீ. (ஸ்ரீ திவ்யாவை திருப்பி போட்டா திவ்யா ஸ்ரீ வருமில்லையா?) இந்த பெயர் குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டோ, அல்லது அறியாமல் செய்த தவறாலோ, நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படத்தை போட்டு ‘விபச்சார தடுப்பு பிரிவால் நடிகை கைது’ என்று எழுதி விட்டார்களாம். அலறி அடித்துக் கொண்டு தனது மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ மூலம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறார் ஸ்ரீ திவ்யா.
அது நான் இல்ல. இல்லவே இல்ல. நான் ரொம்ப நல்ல பொண்ணு. அந்த மாதிரி வேலைக்கெல்லாம் போற கெட்ட பொண்ணு இல்லே என்பது ஸ்ரீ திவ்யாவின் விளக்கம்.

