ஸ்ரீ ரஜினிகாந்த் ஆகாயப்படை! கோச்சடையானுக்காக விதவிதமான பெயர்களில் குவியும் ரஜினியின் ரசிகர் படை

கோச்சடையான் படத்தை வரவேற்க தயாராகிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். நாடு முழுவதுமிருக்கிற அவரது தீவிர ரசிகர்கள் முன்பு இருந்த தங்களுடை ரஜினி ரசிக வெறிக்கு சற்றும் குறையாமல் கிளம்பியிருப்பது கோச்சடையான் குறித்த முந்தைய டவுட்டுகளுக்கு பெருத்த மாறுபாட்டை தரும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல் என்று பரவலாகவும் விதவிதமாகவும் கோச்சடையானுக்கு புகழ் சேர்க்க கிளம்பியிருக்கும் ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களையும் ரஜினியின் தலைமை மன்றத்துக்கு அனுப்பி வருகிறார்கள்.

கோச்சடையான் தொடர் ஓட்டம், கோச்சடையான் க்ரீன் மராத்தான் என்று விதவிதமாக யோசித்து பட்டைய கிளப்பி வரும் ரசிகர்கள், புதுசாக இன்னொன்றையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி போகிற அளவுக்கு இப்படியொரு பெயர் வைக்க அவரது தீவிர ரசிகர்களால் மட்டுமே முடியும். அது என்ன பெயர் என்கிறீர்களா? ஸ்ரீ ரஜினிகாந்த் ஆகாயப்படை! இது திண்டுக்கல் ரசிகர் மன்றத்தினரின் குறும்பு.

வெற்றியை ‘விண்’ அளவுக்கு யோசிப்பதில் தவறில்லையே? அடிச்சு பட்டைய கிளப்புங்க…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நானும் விஜய்சேதுபதியும் கார்த்திகா கலகல

பெண்மையின் உண்மையும், ஆண்மையின் வன்மையும் கலந்தவர்தான் கார்த்திகா என்றால், அதை அவரே ஆமாங்க என்று ஒப்புக் கொள்வார். அறிமுகமான போதே சிம்புவால் வர்ணிக்கப்பட்டவர் (சத்தியாமாக நல்ல மாதிரியில்லை)...

Close